New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/WhatsApp_Reuters_2.jpg)
Whatsapp get voice message transcription feature how it works Tamil News
Whatsapp get voice message transcription feature how it works Tamil News ஆப்பிள் தனது speech recognition தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த உதவும்.
Whatsapp get voice message transcription feature how it works Tamil News
Whatsapp get voice message transcription feature how it works Tamil News : வாட்ஸ்அப் சமீபத்தில் சாட் பேக்கப்பிற்கு எண்ட்-டு-எண்ட் குறியாக்க ஆதரவைச் சேர்த்தது. இப்போது இந்த நிறுவனம் வாய்ஸ் செய்தி டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த அம்சம் தற்போது சோதனை நிலையில் உள்ளது என்று WaBetaInfo குறிப்பிடுகிறது.
மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரம், உங்கள் செய்திகள் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் சேவையகத்திற்கு அனுப்பப்படாது என்றும் அவை ஆப்பிள் வழியே டிரான்ஸ்கிரிப்ஷனை வழங்கும் என்றும் தெரிவித்தது. இது, ஆப்பிள் தனது speech recognition தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த உதவும். இது எப்படி வேலை செய்கிறது?
இந்த அம்சம் ஒரு விருப்பமாகக் கிடைக்கும் என்று அறிக்கை கூறியது. பயனர்கள் ஒரு வாய்ஸ் செய்தியை மாற்ற விரும்பும் போது, அவர்கள் தங்கள் சாதனத்தின் Speech Recognition தொழில்நுட்பத்திற்கு வாட்ஸ்அப் அணுகலை வழங்க வேண்டும்.
இதற்கு நீங்கள் அனுமதி அளித்தவுடன், உங்கள் டிரான்ஸ்கிரிப்ஷன் சேவையைப் பயன்படுத்த முடியும். ஒரு குரல் செய்தியை இயக்கும்போது, "டிரான்ஸ்கிரிப்ட்" பிரிவு திரையில் தோன்றும். அங்கு நீங்கள் செய்திகளைப் படிக்க முடியும். நீங்கள் எந்த இடத்திலிருந்தும் குரல் செய்தியை இயக்கலாம் என்று மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரம் கூறுகிறது.
"ஒரு செய்தி முதன்முறையாக டிரான்ஸ்கிரிப்ட் செய்யப்படும்போது, அதன் டிரான்ஸ்கிரிப்ஷன் வாட்ஸ்அப் தரவுத்தளத்தில் உள்கட்டமைப்பில் சேமிக்கப்படும். எனவே அதன் டிரான்ஸ்கிரிப்ஷனை நீங்கள் பின்னர் பார்க்க விரும்பினால் மீண்டும் டிரான்ஸ்கிரிப்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை" என்று WaBetaInfo கூறியது.
தற்போது, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்று தெரியவில்லை. மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, குரல் செய்தி டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம் விரைவில் iOS பீட்டா பயனர்களுக்குக் கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.