Whatsapp gets new features payments backgrounds chat history Tamil News : பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க வாட்ஸ்அப் தனது செயலியில் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது. ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த செயலியில் பேமென்ட் பின்னணி அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இது iOS பயனர்கள் சாட் வரலாற்றை ஆண்ட்ராய்ட் போனுக்கு மாற்ற அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் இப்போது காணாமல் போகும் புகைப்படங்களை அனுப்பவும், அழைப்புகளை மீண்டும் இணைக்கவும் உதவுகிறது. புதிய அம்சங்களைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
பேமென்ட் பின்னணி
இந்தியாவில் உள்ள பயனர்கள் இனி மெசேஜிங் செயலி மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பும் போது பேமெண்ட் பின்னணியை வாட்ஸ்அப்பில் சேர்க்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அம்சம் இந்தியாவிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வாட்ஸ்அப் கூறுகிறது. மேலும், இது பணத்தை அனுப்புவதோடு மக்கள் எளிதாக தங்களின் உணர்வுகளையும் தெரிவிக்க உதவுகிறது.
“இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம், நண்பர்களும் குடும்பத்தினரும் பணத்தை பரிமாறிக்கொள்ளும்போது, அனுப்புநருக்கும் பெறுநருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை உருவாக்கும் என்பதுதான். நண்பர்களுடன் உணவருந்திவிட்டு, அதன் பில்லை பிரிப்பதற்கும், உங்கள் அன்பின் அடையாளமாக நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்குப் பணம் அனுப்பும்போதும் அல்லது ரக்ஷாபந்தன் அன்று உங்கள் சகோதரிக்கு பரிசளித்தாலும், பணம் செலுத்தும் பின்னணி தனிப்பட்ட முறையில் பணம் அனுப்புவதோடு ஒவ்வொரு பேமென்ட் பின்னல் உங்கள் உணர்வையும் சேர்த்து அனுப்பலாம்.
iOS பீட்டா சாட் வரலாறு பரிமாற்ற அம்சத்தைப் பெறுகிறது
வாட்ஸ்அப் iOS பயனர்களுக்கான சாட் வரலாற்று அம்சத்தையும் வெளியிட்டுள்ளது. 2.21.160.16 iOS பீட்டா பதிப்பைப் பயன்படுத்துபவர்கள் இந்த அம்சத்தைப் பார்க்க முடியும் என்று WaBetaInfo தெரிவித்துள்ளது. அமைப்புகள் பிரிவில்> சாட்களில் இதை நீங்கள் காணலாம். இங்கே, “சாட்களை Android-க்கு நகர்த்தவும்” விருப்பம் உள்ளது. XDA டெவலப்பர்கள், ஒருவர் தங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை ஐபோனிலிருந்து ஃபோனுக்கு யூ.எஸ்.பி-சி கேபிள் பயன்படுத்தி மாற்ற முடியும் என்று தெரிவித்தனர்.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் சாட் வரலாறு பரிமாற்ற அம்சத்தை இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, Samsung Galaxy Z Fold 3 or Galaxy Z Flip 3-ஐப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும். பயனர்கள் மொபைல் இயக்க முறைமைகளை மாற்ற விரும்பினால் அவர்களின் வாய்ஸ் நோட்ஸ், புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை நகர்த்த முடியும்.
ஒருமுறை பார்க்கும் அம்சம்
வாட்ஸ்அப் சமீபத்தில் காணாமல் போதும் புகைப்பட அம்சத்தை பயன்பாட்டின் நிலையான பதிப்பில் சேர்த்தது. எனவே, நீங்கள் இன்னும் முயற்சி செய்யவில்லை என்றால், இப்போது பார்க்கலாம். வாட்ஸ்அப் இந்த அம்சத்தை “ஒரு முறை பார்க்கவும்” என்று அழைக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு புகைப்படத்தை அனுப்பும்போது, ரிசீவர் அதைத் திறந்து சாட்டிலிருந்து வெளியேறியவுடன் அது மறைந்துவிடும். ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு முறை புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்ப விரும்பும் போது ஒரு முறை மீடியா பார்க்கவும் என்கிற ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த வசதியைப் பயன்படுத்த, வாட்ஸ்அப்பைத் திறந்து இணைப்பு ஐகானை க்ளிக் செய்யவும். பிறகு, கேலரிக்குச் சென்று உங்கள் தொடர்புக்கு அனுப்ப விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும். அதைத் தேர்ந்தெடுத்த பிறகு, ‘தலைப்பைச் சேர்’ பட்டியில் கடிகாரம் போன்ற ஐகானைக் காண்பீர்கள். ஒருமுறை பார்க்கவும் அம்சத்தை இயக்க அதை க்ளிக் செய்யவும். நீங்கள் அதை இயக்கியவுடன், “புகைப்படம் ஒரு முறை பார்க்க அமைக்கப்பட்டது” என்று ஒரு செய்தியை பயன்பாடு காண்பிக்கும். நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு காணாமல் போகும் புகைப்படங்களை அனுப்பலாம்.
அழைப்புகளை மீண்டும் இணைக்கவும் ஆப்ஷன்
நீங்கள் நிறுத்திய அல்லது நீங்கள் தவறவிட்ட எந்த அழைப்பையும் மீண்டும் சேர்க்க வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கிறது. பயன்பாட்டின் ‘அழைப்புகள்’ டேபிற்குச் செல்வதன் மூலம் மக்கள் எப்போது வேண்டுமானாலும் குழு அழைப்புகளில் சேர முடியும் என்பதை, இந்த இணைக்கும் அழைப்பு அம்சம் சாத்தியமாக்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil