WhatsApp Gold Hoax : இந்தியாவில் அதிக அளவு குறுஞ்செய்தி மற்றும் தகவல் பரிமாற்று செயலியாக செயல்பட்டு வருகிறது. தவறான போலி செய்திகள் மக்கள் மத்தியில் பரவுவதை தடுப்பதற்கு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில், வாட்ஸ்ஆப் கோல்ட் என்ற வைரஸ், பயனாளிகளிடம் பெரிய அளவில் பயத்தை உருவாக்கியுள்ளாது.
வாட்ஸ்ஆப் கோல்ட் என்ற ஆப்பை டவுன்லோட் செய்து, பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் சேவையை நீங்களும் பயன்படுத்துங்கள் என்ற செய்தியுடன் வாட்ஸ்ஆப்பில் லிங்குடன் செய்திகள் பரவி வருகின்றன.
இதனை இன்ஸ்டால் செய்தால், மார்டினெல்லி என்ற தலைப்புடன் ஒரு வீடியோவில் “உங்களின் செல்போனில் வைரஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது. உங்களின் வாட்ஸ்ஆப் செயலி ஹேக் செய்யப்படும்” என்றும் அந்த வீடியோவில் இடம்பெறுள்ளது.
WhatsApp Gold Hoax இந்த வைரஸ்ஸிடம் எப்படி தப்பிப்பது ?
2017ல் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் கோல்ட் என எதையும் டவுன்லோடு செய்ய வேண்டாம்.
தங்களுக்கு வாட்ஸ்ஆப் கோல்ட் என்ற பெயரில் வரும் லிங்கினை க்ளிக் செய்யவோ டவுன்லோடு செய்யவோ முயற்சிக்க வேண்டாம்.
வாட்ஸ்ஆப் கோல்ட் குறித்து வரும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆப்ஸ்டோர் மற்றும் கூகுள் பிளேயில் இருக்கும் வாட்ஸ்ஆப் செயலிகளை
மட்டும் டவுன்லோடு செய்தல் நலம்.
மேலும் படிக்க : நோக்கியா போன்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் வேலை செய்யாது