Advertisment

வாட்ஸ்அப்பில் இனி க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசலாம்

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் சிறப்பாக செயல்படும் புதிய அப்டேட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Whatsapp group call, Best WhatsApp Features 2018

WhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்

Advertisment

வாட்ஸ்அப் க்ரூப்  வீடியோ மற்றும் வாய்ஸ் கால் ( WhatsApp group call) அப்டேட் செயல்முறைக்கு வந்தது. வாட்ஸ்அப் செயலி உலகில் இருக்கும் அனேக திறன்பேசி பயனர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலி ஆகும்.

மிகவும் பயனுள்ளதாக இந்த செயலினையினை உபயோகிக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அப்டேட்டினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2 பில்லியன்கள் மக்கள் பயன்படுத்தி வரும் இந்த வாட்ஸ்அப் செயலில் புதிதாக வந்திருக்கும் அப்டேட் தான் க்ரூப் கால்.

வீடியோ கால்கள் மற்றும் வாய்ஸ் கால்கள் இரண்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையேயான பேச்சு வார்த்தையினை மிகவும் எளிதாக்கும் வகையில் இருந்தது.

இந்நிலையில் க்ரூப் கால்கள் செய்வதற்கான வாய்ப்பினையும் அளித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

அந்நிறுவனத்தின் ப்ளாக் ஸ்பாட்டில் “உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் இணைய சேவைகள் பொறுத்து இது மாற்றம் அடையும்” என்று இது குறித்து குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் (WhatsApp group call) செய்வது எப்படி?

மற்ற வாட்ஸ்அப் காலினைப் போலவே ஒருவரை மட்டுமே அழைக்க முடியும்.

பின்னர் அதில் ”ஆட் பார்ட்டிசிபெண்ட்” ( add participant ) என்ற வசதியினை பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை இந்த குருப் காலில் இணைத்துக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்சனான 2.18.189 and v2.18.192 - ல் WhatsApp group call சரியாக இயங்குகிறதா என்று சரிபார்க்கப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது இந்த புதிய அப்டேட்.

மொத்தம் நான்கு நபர்கள் WhatsApp group video and audio call மூலம் ஒரே நேரத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளலாம்.

To read this Article in English 

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment