WhatsApp group privacy setting : வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது புதிய ப்ரைவசி செட்டிங்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, க்ரூப் மெசேஜ்கள் மேலும் எளிமையாக்கப்ப்படும். இதன் மூலம் அந்த க்ரூப்பில் யார் இணைக்கப்பட வேண்டும். யார் இணைக்கப்பட வேண்டாம் என அனைத்தையும் க்ரூப் அட்மின்களே தீர்மானம் செய்து கொள்ள இயலும்.
மேலும் இன்வைட் ஃபீயூச்சர் வாயிலாக ஒருவரை நேரடியாக இனி க்ரூப்பில் சேர்க்க இயலாது. அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே இனி க்ரூப்பில் ஆட் செய்ய இயலும்.
group privacy feature - ஐப் பெறுவது எப்படி ?
அக்கௌண்ட் -> ப்ரைவசி -> க்ரூப்ஸ் -> நோபடி/மை காண்டாக்ட்ஸ்/எவ்ரி ஒன் என்ற மூன்று ஆப்சன்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
group privacy எப்படி இயங்குகிறது ?
மேலே கூறியிருக்கும் மூன்று ஆப்சன்களில் எவ்ரிஒன்னை தேர்வு செய்தால், எந்த க்ரூப்பிலும், யார் வேண்டுமானாலும் உங்களை ஆட் செய்யலாம்.
மை காண்டாக்ட்ஸ் -ஐ தேர்வு செய்திருந்தால், உங்கள் காண்டாக்ட்ஸில் இருக்கும் யார் வேண்டுமானாலும் உங்களை ஆட் செய்யலாம்.
நோபடியை செலக்ட் செய்திருந்தால், உங்களின் அனுமதி இல்லாமல் உங்களை இன்விடேசன் லிங்க் வழியாக ஆட் செய்ய இயலாது.