வாட்ஸ் ஆப் பயனாளர்களே... உங்கள் தகவல்கள் திருடு போகும் வாய்ப்பு - கவனம்

Whatsapp hacks : பயனர்களின் சரிப்பார்ப்பு குறியீடுகளை வழங்க சொல்லிக் கேட்டு, ஒரு மோசடி எழுவது இது முதல் முறை அல்ல. சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறுவதன்...

WhatsApp Update: வாட்ஸ் ஆப்பின் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ தொடர்பு எனக் கூறிக்கொண்டு பயனர்களின் verification keys பகிரக் கேட்டு ஒரு புதிய வாட்ஸ் ஆப் மோசடி தொடங்கியுள்ளது. பயனர்க்ளை நம்ப வைப்பதற்காக அந்த கணக்கு அதன் சுயவிவரப் படமாக (profile image) ஒரு வாட்ஸ் ஆப் லோகோவைப் (logo) பயன்படுத்துகிறது. ஆயினும் கூட, வாட்ஸ் ஆப் அணி செய்தியிடல் ஆப்பை பயன்படுத்தி தனது வாடிக்கையாளர்களுடன் ஒருபோதும் இணைவதில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதற்குபதிலாக பொது புதுப்பிப்புகளை சமர்பிக்க முகநூல் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போன்ற சமூக ஊடக தளங்களையே பயன்படுத்தும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

வாட்ஸ் ஆப் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து உன்னிப்பாக கவனித்து வரும் WABetaInfo இந்த புதிய் மோசடி குறித்து முன்னிலைப்படுத்த ஒரு டிவிட்டர் இடுகையை செய்துள்ளது. மோசடிகாரர்கள், பயனர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிசெய்ய குறுஞ்செய்தி மூலமாக வரும் அவர்களது 6 இலக்க verification code ஐ அனுப்ப சொல்லி கேட்பார்கள்.

குறிப்பாக வாட்ஸ் ஆப் பயனர்களை தனது ஆப் மூலமாக தொடர்பு கொள்வதில்லை, மிக அரிதான வேளைகளில் கூட லோகோ மற்றும் கணக்கு பெயருடன் பச்சை சரிபார்க்கப்பட்ட சின்னம் (green checked symbol) இருக்கும். முகநூலால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனம் பயனர்களின் எந்த டேட்டாவையும் பகிரச்சொல்லி கேட்பதில்லை, அங்கீகாரக் குறியீடுகள் உட்பட பயனர்களின் சரிப்பார்ப்பு குறியீடுகளை வழங்க சொல்லிக் கேட்டு, ஒரு மோசடி எழுவது இது முதல் முறை அல்ல. சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறுவதன் மூலம் வாட்ஸ்அப் கணக்குகளை கடத்துவதும் புதியதல்ல. தொற்றுநோய்களுக்கு மத்தியில் வாட்ஸ் ஆப் பயன்பாடு அதிகரித்துள்ள இந்த வேளையில் அதை சாதகமாக பயன்படுத்தி சில ஹேக்கர்கள் (hackers) வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களிடம் அவர்களின் நண்பர்கள் என ஆள்மாறாட்டம் செய்து அவர்களது அங்கீகார குறியீடை பெற முயற்சிக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close