Happy New Year 2020 WhatsApp Wishes Stickers : 2020 புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் உற்சாகமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் வாட்ஸ்ஆப்பில் வாழ்த்துகள் சொல்வதில் தனி சந்தோஷம்தான். தங்களின் பயனாளர்களுக்காகவே வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை தேர்ட் பார்ட்டி ஆப்கள் வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் இதனை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஆப்பிள் ஆப் ஸ்டோர் பாலிசிகளுக்கு பிறகு சில மாற்றங்கள் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது. கீழே தரப்பட்டிருக்கும் சில வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் ஆப்பினை டவுன்லோட் செய்து உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
தமிழ், மலையாளம், கன்னட போன்ற மொழிகளில் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது இந்த செயலி. இதில் சில கடவுள்களின் முகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களும் உண்டு. இந்த ஆப்பின் மொத்த ஸ்டோரேஜ் டேட்டா 13 எம்.பி. ஆகும். இதனை நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ப்ளே ஸ்டோரில் 4.4 ஸ்டார்களை பெற்றிருக்கும் ஆப் இதுவாகும். ஹிந்தி உள்ளிட்ட 9 நியூஇயர் பேக்குகள் இதில் வெளியாகியுள்ளது. நியூ இயர் ஸ்டிக்கர்கள், கவுண்டவுன்கள், சாட் பபுள்ஸ் ஆகியவற்றை இந்த ஆப் மூலம் வாட்ஸ்ஆப் செய்து கொள்ளலாம்.
பிறந்தநாள், குட்நைட், குட்மார்னிங், மீம்ஸ் என்று கலக்கி வரும் இந்த ஆப்பில் தற்போது ஹேப்பி நியூ இயர் 2020 என்ற ஸ்டிக்கர் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த ஆப்பில் வெளியான கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர் பயனாளிகள் மத்தியில் செம்ம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதன் சைஸ் 6 எம்.பி. ஆகும்.
இதனுடைய மொத்த சைஸ் 17 எம்.பி. ஆகும். மிகவும் அழகான தனித்துவம் மிக்க ஸ்டிக்கர்கள் இதில் New Year Badge 2020 என்ற பெயர்களில் ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது. அயர்ன்மேன், மார்வெல் சூப்பர் ஹீரோஸ், மற்றும் பர்த்டே ஸ்டிக்கர்கள் எல்லாம் இதில் உள்ளது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Whatsapp happy new year 2020 stickers