Whatsapp how to back up chats to google drive and restore Tamil News : வாட்ஸ்அப் உங்கள் அனைத்து சாட்களையும் கூகுள் ட்ரைவில் எளிதாக காப்புப் பிரதி எடுக்க அனுமதிக்கிறது. கூகுள் டிரைவ் காப்புப்பிரதியைப் பயன்படுத்த, உங்கள் தொலைபேசியில் செயல்படுத்தப்பட்ட கூகுள் கணக்கும் உங்கள் தொலைபேசியில் நிறுவப்பட்ட கூகுள் பிளே சேவைகளும் தேவைப்படும்.
உங்கள் கூகுள் கணக்கை மாற்றுவதற்கான விருப்பத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்தால் முந்தைய கணக்கில் நீங்கள் சேமித்த எந்த காப்புப்பிரதிகளுக்கான அணுகலையும் இழப்பீர்கள். உங்கள் வாட்ஸ்அப் சாட்களை கூகுள் ட்ரைவில் எவ்வாறு காப்புப் பிரதி எடுத்து அவற்றை மீட்டெடுக்கலாம் என்பதற்கான விரைவான வழிகாட்டி இங்கே.
வாட்ஸ்அப்: கூகுள் டிரைவில் சாட்களை காப்புப் பிரதி எடுப்பது எப்படி
ஸ்டெப் 1: உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறந்து அமைப்புகள் பிரிவுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: சாட் > சாட் பேக்கப் > கூகுள் ட்ரைவிற்கு காப்புப் பிரதி எடுக்கவும்.
ஸ்டெப் 3: 'எப்போதும் இல்லை' என்கிற ஆப்ஷனை தவிர வேறு காப்பு frequency-ஐ தேர்ந்தெடுக்கவும். மாற்றாக, உங்கள் சாட்களை எந்த நேரத்திலும் கூகுள் ட்ரைவில் கைமுறையாகக் காப்புப் பிரதி எடுக்கவும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஸ்டெப் 4: நீங்கள் ஒரு காப்பு frequency-ஐ தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் சாட் வரலாற்றைக் காப்புப் பிரதி எடுக்க விரும்பும் கூகுள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் கூகுள் கணக்கு இணைக்கப்படவில்லை என்றால், அது கேட்கும் போது கணக்கைச் சேர் என்பதை க்ளிக் செய்யவும் மற்றும் உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.
ஸ்டெப் 5: காப்புப்பிரதிகளுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் நெட்வொர்க்கைத் தேர்வுசெய்ய இப்போது நீங்கள் பேக் அப் மீது க்ளிக் செய்ய வேண்டும். செல்லுலார் டேட்டா நெட்வொர்க் கூடுதல் டேட்டா கட்டணங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் வைஃபை பயன்படுத்தி காப்புப் பிரதி எடுப்பது நல்லது.
வாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் உங்கள் அரட்டை வரலாற்றை எப்படி மீட்டெடுப்பது?
கூகுள் டிரைவிலிருந்து வாட்ஸ்அப் சாட்களை மீட்டெடுக்கும் செயல்முறை எளிதானது மற்றும் அதற்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். உங்கள் சாட்களை மீட்டெடுப்பதற்கு, காப்புப்பிரதியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அதே தொலைபேசி எண்ணையும் கூகுள் கணக்கையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். இதை பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
ஸ்டெப் 1: உங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் பயன்பாட்டை மீண்டும் நிறுவவும். இதனால், நீங்கள் கூகுள் டிரைவ் வழியாக சாட்களை மீட்டெடுக்க முடியும். மெசேஜிங் செயலியைத் திறந்து உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்.
ஸ்டெப் 2: கேட்கும் போது, கூகுள் ட்ரைவிலிருந்து உங்கள் சாட்கள் மற்றும் மீடியாவை மீட்டமைக்க "மீட்டமை" பட்டனை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: மறுசீரமைப்பு செயல்முறை முடிந்ததும், 'அடுத்து' என்பதை க்ளிக் செய்யவும். துவக்கம் முடிந்ததும் உங்கள் சாட்கள் காட்டப்படும்.
குறிப்பு: உங்கள் சாட்களை மீட்டெடுத்த பிறகு வாட்ஸ்அப் உங்கள் மீடியா ஃபைல்களை மீட்டெடுக்கத் தொடங்குகிறது. கூகுள் டிரைவிலிருந்து எந்த முன் காப்புப்பிரதியும் இல்லாமல் நீங்கள் வாட்ஸ்அப்பை நிறுவினால், வாட்ஸ்அப் உங்கள் உள்ளூர் காப்பு கோப்பிலிருந்து தானாகவே மீட்டமைக்கப்படும்.
வாட்ஸ்அப்பின்படி, உங்கள் தொலைபேசி கடந்த ஏழு நாட்கள் வரை உள்ள உள்ளூர் கோப்புகளை மட்டுமே சேமிக்கிறது. எனவே, கூகுள் ட்ரைவில் ஃபைல்களை காப்புப் பிரதி எடுப்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.