வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பயன்படுத்தும் மெசேஜிங் ஆப் ஆகும். வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளதால் இது அனைவரையும் கவர்ந்துள்ளது. எளிதாக மற்றவர்களுக்கு செய்தி, படங்கள், வீடியாக்களை அனுப்ப முடிகிறது. அந்தவகையில் வாட்ஸ்அப் முக்கியமான ஃபைல்கள், படங்கள், வீடியாக்களை பேக்அப் (Backup) எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு பயனர்கள் (Google Drive), ஐபோன் பயனர்கள் (iCloud) மூலமும் பேக்அப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். Google அல்லது Apple சர்வீல்களில் பேக்அப் எடுக்க விரும்பாதவர்கள் ஆஃப்லைன் பேக்அப் செய்து கொள்ளலாம். அது பற்றி இங்கு பார்க்கலாம்.
Finding your WhatsApp files
ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் ஃபைல்கள் போன் internal storage சேமிக்கப்படுகிறது. வாட்ஸ்அப் போட்டோ, வீடியோ, GIFs என அனைத்தும் தனி தனி folder-களாக சேமிக்கப்படுகிறது.
இதை கண்டறிய முதலில் உங்கள் போனில் Internal Storage பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Androidd> media> சென்ற com.whatsapp> பக்கத்தை கிளிக் செய்து அதில், WhatsApp> செல்ல வேண்டும்.
இந்த வாட்ஸ்அப் folderயில் sub-folders இருக்கும். WhatsApp Animated Gifs, WhatsApp Audio, WhatsApp Images and WhatsApp Video எனத் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆஃப்லைன் பேக்அப்
வாட்ஸ்அப் ஃபைல்களை ஆஃப்லைனில் கணினி அல்லது லேப்டாப்பில் பேக்அப் செய்து பின்பு அதை உங்கள் external hard drive-இல் சேமித்துக் கொள்ளலாம்.
அதற்கு, உங்கள் போனை கணினி அல்லது லேப்டாப்பில் கனெக்ட் செய்து, மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாட்ஸ்அப் folder பக்கம் சென்று copy செய்து பேக்அப் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட folder அல்லது மொத்தமாகவும் பேக்அப் எடுத்துக் கொள்ளலாம். புதிய போனில் வாட்அப் reinstall செய்யும் போது உங்களுக்கு தேவையான ஃபைல்களை இதிலிருந்து மாற்றிக் கொள்ளலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil