Whatsapp how to create your own 2021 news year stickers : வாட்ஸ்அப் ஏற்கெனவே பல ஸ்டிக்கர் பேக்குகளை வழங்குகிறது. ஆனால், உங்கள் சொந்த ஸ்டிக்கர் பேக்குகளை உருவாக்க விரும்பினால் என்ன செய்வது? வேடிக்கையான மற்றும் ஆக்கப்பூர்வமான வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்க பல வழிகள் உள்ளன. ஸ்டிக்கர்களை உருவாக்க நீங்கள் எந்த புகைப்பட எடிட்டிங் பயன்பாடுகளையும் பயன்படுத்தலாம் என்றாலும், இரண்டு நிமிடங்களுக்குள் ஸ்டிக்கர்களை உருவாக்க உதவும் ‘ஸ்டிக்கர் மேக்கர்’ பயன்பாட்டைப் பதிவிறக்குமாறு பரிந்துரைக்கிறோம். மாற்றாக, நீங்கள் ‘ஸ்டிக்கர் ஸ்டுடியோ - வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மேக்கர்’ பயன்பாட்டையும் பயன்படுத்தலாம். உங்கள் சொந்த வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்க நீங்கள் விரும்பவில்லை என்றால், 2021 புத்தாண்டு ஸ்டிக்கர்களை அனுப்ப நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் பயன்பாடுகளை ப்ளே ஸ்டோரில் காணலாம். உங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்க விரும்பினால், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
வாட்ஸ்அப்: உங்கள் சொந்த 2021 புத்தாண்டு ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி
ஸ்டெப் 1: நீங்கள் முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘ஸ்டிக்கர் மேக்கர்’ பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்.
ஸ்டெப் 2: பயன்பாட்டைத் திறந்து, ‘புதிய ஸ்டிக்கர்பேக்கை உருவாக்கு’ என்பதை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: ஸ்டிக்கர் பேக்கின் பெயரை உள்ளிட்டு பேக்கிற்கு ஒரு ஆசிரியர் பெயரைச் சேர்க்கும்படி கேட்கப்படுவீர்கள்.
ஸ்டெப் 4: ஒவ்வொரு பேக்கிலும் 15 ஸ்டிக்கர்களைச் சேர்க்கப் பயன்பாடு உங்களை அனுமதிக்கிறது. உங்கள் சொந்த வாட்ஸ்அப் ஸ்டிக்கரை உருவாக்க, நீங்கள் எந்த பெட்டியையும் க்ளிக் செய்யலாம். புகைப்படம், கேலரியை திற, கோப்பைத் தேர்ந்தெடு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சில விருப்பங்களைப் பெறுவீர்கள். தொலைபேசியின் கேலரியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி ஸ்டிக்கர்களை உருவாக்க விரும்பினால் கேலரியை திற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். எந்தவொரு படத்தையும் உடனடியாகக் க்ளிக் செய்து அதன் ஸ்டிக்கரை உருவாக்குவதற்கான விருப்பத்தையும் இந்த பயன்பாடு வழங்குகிறது. உங்கள் ஃபைல் மேனேஜரிடமிருந்து படங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பமும் உள்ளது.
ஸ்டெப் 5: ‘கேலரியை திற’ ஆப்ஷனை க்ளிக் செய்து, ஸ்டிக்கரை உருவாக்க எந்த புகைப்படத்தையும் தேர்ந்தெடுக்கலாம். படத்தை வெவ்வேறு வடிவத்தில் வெட்டுவதற்கான விருப்பத்தையும் நீங்கள் பெறுவீர்கள். மேலும், ஃப்ரீஹேண்ட் விருப்பமும் இதில் உள்ளது. ஒரு வடிவத்தைக் கைமுறையாக வரைய அல்லது ஸ்டிக்கரை செதுக்க நீங்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். இது முடிந்ததும், அவுட்லைன் அல்லது உரையைச் சேர்க்க விருப்பத்தை இந்த பயன்பாடு வழங்கும். அதனைச் சேர்த்த பிறகு, நீங்கள் ‘ஸ்டிக்கரைச் சேமி’ என்பதை க்ளிக் செய்யலாம்.
ஸ்டெப் 6: இப்போது வாட்ஸ்அப்பில் 2021 புத்தாண்டு ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த, நீங்கள் ‘வாட்ஸ்அப்பில் சேர்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அது சேர்க்கப்பட்டவுடன் உறுதிப்படுத்தல் செய்தியைத் திரையில் காண்பீர்கள். வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்பேக்கைச் சேர்க்கக் குறைந்தபட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
ஸ்டெப் 7: இப்போது வாட்ஸ்அப்பைத் திறந்து, இமோஜி ஐகானை க்ளிக் செய்யவும். கீழ் வலது மூலையில் அமைந்துள்ள ஸ்டிக்கர்கள் ஐகானை தேர்ந்தெடுக்கவும். இங்கே, உங்கள் புதிய ஸ்டிக்கர் பேக்கைக் காண்பீர்கள்.
ஸ்டிக்கர்கள் பிரிவில் அமைந்துள்ள “+” ஐகானை அழுத்துவதன் மூலம் நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து ஸ்டிக்கர் பேக்கை நீக்கலாம். பின்னர் ‘எனது ஸ்டிக்கர்கள்’ பகுதிக்குச் சென்று, உங்கள் ஸ்டிக்கர் பேக்கை மேலே டஸ்ட்பின் ஐகானுடன் காண்பீர்கள். பேக்கைத் தட்டுவதன் மூலம் அதை நீக்கலாம் மற்றும் ஸ்டிக்கர் மேக்கர் பயன்பாடு வழியாக எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.