Advertisment

வாட்ஸ்அப் : குறிப்புக்கள் எடுக்க உங்களுக்கு நீங்களே செய்திகள் அனுப்புவது எப்படி?

Whatsapp how to message yourself to take notes Tamil News நீங்கள் உங்களுக்கு நீங்களே செய்தி அனுப்பத் தொடங்கலாம் மற்றும் நீங்கள் செய்ய விரும்பும் குறிப்புகள் மற்றும் பிற விஷயங்களையும் சேர்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Whatsapp how to message yourself to take notes Tamil News

Whatsapp how to message yourself to take notes Tamil News

Whatsapp how to message yourself to take notes Tamil News : வாட்ஸ்அப்பில் "சாட்டுக்கு கிளிக் செய்ய" என்ற அம்சம் உள்ளது. இது உங்கள் தொலைபேசியின் முகவரி புத்தகத்தில் ஒருவரின் தொலைபேசி எண்ணை சேமிக்காமல் அவர்களுடன் சாட் செய்யத் தொடங்கும். குறிப்புகளைச் சேர்க்க அல்லது சில முக்கியமான தகவல்களைச் சேமிக்க உங்கள் சொந்த வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணில் செய்தி அனுப்ப இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

Advertisment

நீங்கள் தெரியாத நபருடன் அவர்களின் எண்ணைச் சேமிக்காமல் சாட் செய்ய விரும்பினால், நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ள அதே செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், வாட்ஸ்அப்பில் நபரின் தொலைபேசி எண் செயலில் உள்ளது என்பதை நீங்கள் ஒரு சாட் செய்து மட்டுமே தொடங்க முடியும் என்பதை நினைவில் கொள்க.

வாட்ஸ்அப்: குறிப்புக்கள் எடுக்க உங்களுக்கு நீங்களே செய்திகள் அனுப்புவது எப்படி?

ஸ்டெப் 1: முதலில் உங்கள் சாதனத்தில் எந்த ப்ரவுசரையும் திறக்கலாம். இந்த செயல்முறையை முடிக்க உங்களிடம் செயலில் இணையம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஸ்டெப் 2: இப்போது, நீங்கள் இந்த "wa.me//"-ஐ முகவரிப் பட்டியில் நகலெடுக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணைச் சேர்க்கவும். உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடுவதற்கு முன்பு நீங்கள் உங்கள் நாட்டின் குறியீட்டைச் சேர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால் அந்த மெசேஜிங் செயலி உங்கள் எண் தவறானது என்று சொல்லும். உதாரணமாக, இந்தியப் பயனர்கள் "wa.me//91XXXXXXXXXXX" எனத் தட்டச்சு செய்யலாம்.

ஸ்டெப் 3: நீங்கள் இப்போது ஒரு வாட்ஸ்அப் பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள். மேலே உங்கள் தொலைபேசி எண்ணையும், "சாட்டுக்கு தொடரவும்" என்று ஒரு பெட்டியையும் காண்பீர்கள். நீங்கள் அந்த பெட்டியில் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 4: வாட்ஸ்அப் உங்கள் அனைத்து சாட் மற்றும் சாட் சாளரத்தையும் காண்பிக்கும். எனவே, நீங்கள் உங்களுக்கு நீங்களே செய்தி அனுப்பத் தொடங்கலாம் மற்றும் நீங்கள் செய்ய விரும்பும் குறிப்புகள் மற்றும் பிற விஷயங்களையும் சேர்க்கலாம்.

மொபைல் மற்றும் வெப் பதிப்புகளுக்கு இந்த செயல்முறை ஒன்றுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment