வாட்ஸ்அப்பில் டைப் செய்யாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

நீங்கள் வாட்ஸ்அப்பில் டைப் செய்யாமல் மெசேஜ் அனுப்ப கூகுள் அஸிஸ்டண்ட் இடம் கேட்க வேண்டும். அவ்வளவுதான் பிறகு உங்கள் வேலை முடிந்துவிடும். அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த செய்தியை படிக்கவும்.

WhatsApp, How to send messages without typing in WhatsApp, வாட்ஸ்அப்பில் டைப் செய்யாமல் மெசேஜ் அனுப்பவது எப்படி, வாட்ஸ்அப், கூகிள், கூகிள் அஸிச்டண்ட், வாட்ஸ் அப் அப்டேட்ஸ், send messages without typing in WhatsApp steps here, techonology, tamil technology news whats app news, whatsapp updates

வாட்ஸ்அப் பயனர்கள் மெசேஜிங் செயலியில் டைப் செய்யாமல் ஒரு சில செய்திகளை எளிதாக அனுப்ப முடியும். அதற்காக அனைத்து டிஜிட்டல் அஸிஸ்டன்களுகும் நன்றி சொல்லுங்கள். வெச்சுவல் அஸிஸ்டண்ட்டை வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பச் சொல்லிவிட்டால் பிறகு உங்கள் வேலை முடிந்துவிடும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுள் அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்தி மெசேஜ்களை அனுப்பலாம். ஐஓஎஸ் பயனர்கள் சிரியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்பலாம். நீங்கள் பிஸியாக இருக்கும்போது அல்லது ஒரு மெசேஜ்ஜை டைப் செய்ய முடியாத நிலையில் இருக்கும்போது மேசேஜ்களை அனுப்ப இது ஒரு வசதியான வழியாகும். ஆனால், இன்னும், ஒரு மெசேஜை அனுப்ப வேண்டி இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும்.

ஒருவர் டிஜிட்டல் அஸிஸ்டண்ட்களை உங்களுக்காக மெசேஜ்களைப் படிக்கும்படி கேட்கலாம். ஆனால், வெர்ச்சுவல் அஸிஸ்டண்ட் சில அனுமதிகளைக் கேட்கும். உங்கள் அஸிஸ்டண்ட் உங்கள் வேலையைச் செய்ய விரும்பினால் நீங்கள் அதை அளிக்க வேண்டும். உங்கள் தொலைபேசியின் அறிவிப்புகளுக்கான அணுகலை நீங்கள் அளிக்க வேண்டும்.

இதற்காக, கூகிள் ஒரு மெசேஜ்ஜைக் காண்பிக்கும். அதில் “உங்கள் மேசேஜ்கள், காலண்டர் நிகழ்வுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைக் கேட்க, உங்கள் அறிவிப்புகளுக்கு Google பயன்பாட்டை அணுகவும்.” கவலைப்பட வேண்டாம், நீங்கள் இதை எப்போதும் செட்டிங்க்ஸில் மாற்றலாம். நீங்கள் செய்ய வேண்டியது செட்டிங்ஸில் உள்ள அறிவிப்புப் பிரிவுக்குச் சென்று Google க்கான அறிவிப்பு அணுகலை முடக்குவதுதான்.

இப்போது, ​​நீங்கள் டைப் செய்யாமல் வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்ப விரும்பினால், கூகிள் அஸிஸ்டண்ட்ஸ் உதவியுடன் நீங்கள் எப்படி மெசேஜ்களை அனுப்பலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.

வாட்ஸ்அப்: டைப் செய்யாமல் மெசேஜ்களை அனுப்புவது எப்படி

படி 1: முதலில், “ஹே கூகுள்” அல்லது “ஓகே கூகுள்” என்று கூறி அதை அழைக்க முடியாவிட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை நிறுவ வேண்டும். உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில், Google அசிஸ்டண்ட்டைச் செயல்படுத்த முகப்பு பொத்தானைத் தொட்டுப் பிடிக்கவும்.

படி 2: நீங்கள் அதை நிறுவியதும், Open பொத்தானைத் தட்டவும் மற்றும் “ஹே கூகிள்” என்று சொல்லவும்.

படி 3: அதன் பிறகு, டிஜிட்டல் அஸிஸ்டண்ட் உங்களுக்கு பதிலளிக்கும். நீங்கள் “XXXX (பெயர்) க்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும் என்று சொல்லலாம். நீங்கள் ஒரு மேசேஜ்ஜை அனுப்ப விரும்பும் தொடர்பின் பெயரை குறிப்பிட வேண்டும்.

படி 4: கூகிள் அஸிஸ்டண்ட் மெசேஜ்ஜில் என்ன குறிப்பிடப்பட வேண்டும் என்று கேட்கும்.

படி 5: வெச்சுவல் அஸிஸ்டண்ட் மெசேஜ்ஜை டைப் செய்து காண்பிக்கும். மெசேஜ் அனுப்ப தயாராக இருப்பதாக அஸிஸ்டண்ட் கூறும். அதன்பிறகு, “சரி, அனுப்பு” என்று நீங்கள் சொல்ல வேண்டும். உங்கள் மெசேஜ் பின்னர் அனுப்பப்படும். இரண்டாவது முறை, அஸிஸ்டண்ட் நேரடியாக மெசேஜ்ஜை அனுப்பலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp how to send messages without typing steps here

Next Story
கிளப்ஹவுஸின் ஆண்ட்ராய்டு ஆப்; பயன்படுத்துவது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com