Whatsapp how to send messages without typing Tamil News : வாட்ஸ்அப் பயனர்கள் மெசேஜிங் செயலியில் தட்டச்சு செய்யாமல் ஒரு சில செய்திகளை எளிதாக அனுப்ப முடியும். விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டிடம் வாட்ஸ்அப் அனுப்பச் சொல்லுங்கள். அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்துவிடும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுள் அசிஸ்டன்ட்டைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்பலாம். iOS பயனர்கள் சிரியை பயன்படுத்தி வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பலாம். நீங்கள் பிஸியாக இருக்கும்போது அல்லது ஒரு செய்தியை தட்டச்சு செய்ய முடியாத ஆனால் அவசியம் ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என்கிற நிலையில் செய்திகளை அனுப்ப இது ஒரு வசதியான வழி.
நீங்கள் செய்திகளைப் படிக்கும்படி டிஜிட்டல் உதவியாளர்களைக் கேட்கலாம். ஆனால், மெய்நிகர் உதவியாளர் குறிப்பிட்ட அனுமதியைக் கேட்கும். உங்கள் வேலையை உதவியாளர் செய்ய விரும்பினால் அதனை நீங்கள்தான் வழங்க வேண்டும். உங்கள் தொலைபேசியின் அறிவிப்புகளுக்கான அணுகலை நீங்கள் முதலில் வழங்க வேண்டும்.
இதற்காக, கூகுள் ஒரு செய்தியை காண்பிக்கும். அதில் "உங்கள் செய்திகள், காலண்டர் நிகழ்வுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைக் கேட்க, உங்கள் அறிவிப்புகளுக்கு கூகுள் பயன்பாட்டை அணுகவும்" என்றிருக்கும். கவலைப்பட வேண்டாம், நீங்கள் இதை எப்போதும் அமைப்புகளில் மாற்றலாம். நீங்கள் செய்ய வேண்டியது அமைப்புகளில் உள்ள அறிவிப்புப் பிரிவுக்குச் சென்று கூகுளுக்கான அறிவிப்பு அணுகலை முடக்குவதுதான்.
இப்போது, நீங்கள் தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்ப விரும்பினால், கூகுள் அசிஸ்டென்ட்டின் உதவியுடன் நீங்கள் எவ்வாறு செய்திகளை அனுப்பலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
வாட்ஸ்அப்: டைப் செய்யாமல் எப்படி செய்திகளை அனுப்புவது?
ஸ்டெப் 1: முதலில், "ஹே கூகுள்" அல்லது "ஓகே கூகுள்" என்று கூறி அதை அழைக்க முடியாவிட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டன்ட் செயலியை நிறுவ வேண்டும். உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில், கூகுள் அசிஸ்டன்ட்டைச் செயல்படுத்த ஹோம் பட்டனை தொட்டுப் பிடிக்கவும்.
ஸ்டெப் 2: நீங்கள் அதை நிறுவியதும், "திற" பட்டனை க்ளிக் செய்யவும் மற்றும் "ஹே கூகுள்" என்று சொல்லவும்.
ஸ்டெப் 3: அதன் பிறகு, டிஜிட்டல் உதவியாளர் உங்களுக்கு பதிலளிக்கும். நீங்கள் "XXXX (பெயர்)-க்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பவும்" என்று சொல்லலாம். நீங்கள் ஒரு செய்தியை அனுப்ப விரும்பும் தொடர்பின் பெயரை நீங்கள் குறிப்பிட வேண்டும்.
ஸ்டெப் 4: கூகுள் உதவியாளர், செய்தியில் என்ன குறிப்பிடப்பட வேண்டும் என்று கேட்கும்.
ஸ்டெப் 5: விர்ச்சுவல் அசிஸ்டென்ட் செய்தியை டைப் செய்து காண்பிக்கும். செய்தி அனுப்ப தயாராக இருப்பதாக உதவியாளர் கூறும். அதன்பிறகு, "சரி, அனுப்பு" என்று நீங்கள் சொல்ல வேண்டும். உங்கள் செய்தி பின்னர் அனுப்பப்படும். இரண்டாவது முறை, உதவியாளர் நேரடியாக செய்தியை அனுப்பும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.