வாட்ஸ் அப் இருக்கு… ஆனா இந்த நல்ல விஷயத்தை யோசிச்சீங்களா?

Whatsapp : ஊரடங்கு காலத்தில் அவர்கள் தங்கள் அன்பானவர்களுடன் தொடர்பு கொள்வதில் சிரமப்படுகின்றனர். அவர்கள் மொத்தமாக சார்ந்து இருப்பது சாதாரண தொலைபேசி அழைப்புகளை மட்டும் தான்

By: May 8, 2020, 8:49:00 PM

WhatsApp News: கோவிட்-19 ஊரடங்குக்கு மத்தியில் பெரும்பாலும் தொழில்நுட்ப ஆர்வலர்களான இளம் வயதினர் வீடியோ அழைப்பு செய்யும் அப்ளிக்கேஷன்களையும் சமூக ஊடக தளங்களையும் பயன்படுத்தி தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் வயதானவர்களின் நிலை அவ்வாறு இல்லை. அவர்கள் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்தவர்கள் இல்லை, எனவே இந்த ஊரடங்கு காலத்தில் அவர்கள் தங்கள் அன்பானவர்களுடன் தொடர்பு கொள்வதில் சிரமப்படுகின்றனர். அவர்கள் மொத்தமாக சார்ந்து இருப்பது சாதாரண தொலைபேசி அழைப்புகளை மட்டும் தான்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பல செய்தியிடல் தளங்கள் இருந்தாலும் அவற்றில் எளிதாக பயன்படுத்தக் கூடியது வாட்ஸ் ஆப் (WhatsApp) தான். இதில் குறுஞ்செய்தி அனுப்புவதோடு மட்டுமல்லாமல் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் செய்வது மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது ஆகியவற்றையும் செய்ய முடியும். ஒரு வயதான மனிதர் எவ்வாறு வாட்ஸ் ஆப்பை தொடங்கி பயன்படுத்த முடியும் மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் எவ்வாறு அவரது அன்பானவர்களோடு இணைந்து இருக்க முடியும் என்பது குறித்த படிப்படியான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

வாட்ஸ் ஆப்பை நிறுவி பயன்படுத்துவதற்கான வழிகாட்டி

Install WhatsApp

ஆண்ட்ராய்ட் கைபேசியை நீங்கள் பயன்படுத்தினால் ‘Google Play’ ஆப்பை திறந்துக் கொள்ளுங்கள். அதுவே iPhone என்றால் ‘App Store’ ஐ திறந்துக் கொள்ளுங்கள். அடுத்து search bar ல் ‘WhatsApp’ என்று தட்டச்சு செய்து ஆப்பை தேர்வு செய்து ‘Install’ என்பதை சொடுக்குங்கள். வாட்ஸ் ஆப் பதிவிரக்கம் செய்யப்பட்டு உங்கள் கைபேசியில் நிறுவப்பட்டுவிடும். இப்போது வாட்ஸ் ஆப்பை திறந்து பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

 

Setting up WhatsApp

இதற்கு நீங்கள் உங்கள் நாட்டின் குறியீடு (country code +91) மற்றும் உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். இதை செய்தவுடன் வாட்ஸ் ஆப் ஒரு OTP (One Time Password) உடன் உறுதிபடுத்தும் குறுஞ்செய்தியை அனுப்பும். உங்கள் கைபேசி அந்த OTP ஐ தானாக எடுத்துக் கொண்டு அடுத்த நிலைக்கு உங்களை கொண்டு செல்லும்.

அடுத்து நீங்கள், ஒரு பயனர் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். உங்களது முழு பொயர் அல்லது nickname ஏதாவது ஒன்றை உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து display picture க்காக வாட்ஸ் ஆப் உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்ய சொல்லும் இது கட்டாயம் கிடையாது.
வாட்ஸ் ஆப் உங்கள் கைபேசி தொடர்பில் (phone contacts) உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யார்யார் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறார்கள் என்பதை தானாக கண்டறிந்து, அவர்களது பெயர்களை உங்களது வாட்ஸ் ஆப் தொடர்பு பட்டியலில் போட்டு விடும்.

வாட்ஸ் ஆப்பில் ஒரு குறுஞ்செய்தியை எவ்வாறு அனுப்புவது.

வாட்ஸ் ஆப்பை திறந்து கீழே உள்ள Chat icon ஐ தட்டவும். அடுத்து ஒரு தொடர்பை (contact) தேர்வு செய்து செய்தியை அனுப்பவும். உங்களது chats கள் ‘Chats’ tab ல் தெரியும். இது தான் உங்களது செய்தியிடல் தளத்தின் home screen.

புகைப்படங்கள், வீடியோக்களை எவ்வாறு அனுப்புவது

ஒரு chat ஐ உள்ளீடு செய்த பிறகு, typing space க்கு அருகில் உள்ள ‘attachment’ ஐகானை தட்டி புகைபடங்கள் அல்லது வீடியோவை தேர்வு செய்யவும். chat ல் உள்ள mic ஐகானில் உங்களது விரலை வைத்து ஒரு குரல் குறிப்பையும் (voice note) அனுப்ப முடியும். இது தட்டச்சு செய்யாமல் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழி. chat ன் கீழ் உள்ள கேமிரா ஐகான் வேகமாக ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்ப உதவும்.

குரல் அழைப்பை (voice call) எவ்வாறு செய்வது

உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வேறு நாட்டிலிருந்தாலும் கூட வாட்ஸ் ஆப் மூலமாக நீங்கள் அவர்களுடன் இலவசமாக குரல் அழைப்பு செய்து பேச முடியும். ஒரு குரல் அழைப்பை செய்ய ‘Calls’ tab க்கு சென்று கீழே உள்ள ‘New Call’ பொத்தானை தட்டவும். அடுத்து நீங்கள் யாரிடம் பேச வேண்டுமோ அவரை தேர்வு செய்து call ஐகானை தட்டி அழைப்பை செய்து பேசவும்.

வீடியோ அழைப்பை எவ்வாறு செய்ய வேண்டும்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆடியோ அழைப்பு செய்வது போல வீடியோ அழைப்பையும் இலவசமாக செய்ய வாட்ஸ் ஆப் அனுமதிக்கிறது. நீங்கள் எவ்வாறு உள்ளீர்கள் என்று அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், அல்லது உங்களது குழந்தைகள் அல்லது பேரக்குழந்தைகளை பார்த்தவாரே பேச வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் வீடியோ அழைப்பு செய்யலாம். ஆடியோ அழைப்பு செய்வது போலவே ஒரு வீடியோ அழைப்பையும் செய்ய வேண்டும் ஆனால் ‘video calling’ ஐகானை தட்டி செய்ய வேண்டும்.

எவ்வாறு ஒரு WhatsApp Group ஐ உருவாக்குவது

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பேசுவதற்கான சிறந்த வழி ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை (WhatsApp Group) உருவாக்குவது. அது உங்களது குடும்பம் அல்லது நண்பர்கள் குழு அல்லது அருகில் வசிப்பவர்களாக இருக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் உங்களை அவர்களது groups ல் இணைவதற்கு அழைக்கலாம் அல்லது நீங்களே கூட ஒரு புது group ஐ உருவாக்கலாம். ஒரு புது group ஐ உருவாக்க வாட்ஸ் ஆப்பை திறந்து திரையின் மேல் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிக்ளை அழுத்தி, ‘New Group’ ஐ தட்டவும்.

இனி அந்த group ல் சேர்க்க வேண்டிய தொடர்புகளை தேர்வு செய்யவும். நீங்கள் உங்கள் group ல் சேர்க்க வேண்டிய தொடர்புகளின் பெயர்களின் அருகில் உள்ள சுற்று வட்டத்தை தொடவும். சேர்க்கவேண்டிய தொடர்புகளை தேர்வு செய்த பிறகு, நீங்கள் ஆண்ட்ராய்ட் பயனாளர் என்றால் அம்பு குறியை தட்டவும், iPhone பயனாளர் என்றால் ‘Next’ என்பதை அழுத்தவும். இப்போது உங்கள் Group க்கு ஒரு பெயரைக் கொடுக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp how to use whatsapp whatsapp guide whatsapp install download whatsapp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X