வாட்ஸ் அப் சேவை திடீர் பாதிப்பு: பயனாளர்கள் அவதி

India whatsapp down : வாட்ஸ்அப் செயலி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலேயே, சேவை தடைபடுவதாக தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

WABetainfo, whatsapp 2.20.197.3 update
whatsapp update

இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் வாட்ஸ்அப் செயலியின் சேவை, புதன்கிழமை ( ஜூலை 15ம் தேதி) சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. தங்களால் மெசேஜ்களை அனுப்பவோ , பெறவோ இயலவில்லை என்று பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், பலரோ, தங்களால் தங்களது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை லாகின் செய்ய இயலவில்லை என்று தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பாதிப்பு சரிசெய்யப்பட்டு, செயல்பாடு சீராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, DownDetector இணைதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வாட்ஸ்அப் செயலியின் செயல்பாடு, ஜூலை 15ம் தேதி அதிகாலை 01.30 மணியளவில், இந்தியா, இலங்கை, பெரு, லண்டன், புதுடெல்லி, நியூயார்க், பிரேசில், நெதர்லாந்து, ஜெர்மனி, எகிப்து, கொலம்பியா, கஜகிஸ்தான், ஸ்வீடன், ருமேனியா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் சேவை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பயனாளர்கள் அதுகுறித்து டுவிட்டரில் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர். நெட்டிசன்கள் இந்த விவகாரத்தை, டுவிட்டரில் #WhatsApp and #WhatsAppDown என்ற ஹேஸ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். நெட்டிசன்கள் இதுதொடர்பான மீம்களை, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைளதங்களில் பதிவு செய்துவருகின்றனர்.

DownDetector வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாட்ஸ்அப் பயனாளர்களில் 58 சதவீதத்தினருக்கு கனெக்சன் தொடர்பான குறைபாடு இருந்ததாகவும், 38 சதவீதத்தினருக்கு மெசேஜ்களை அனுப்பவோ, பெறவோ இயலவில்லை மற்றும் 3 சதவீத பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலியை லாகின் செய்யவே இயலவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியின் சேவை பாதிக்கப்படுவது இது முதல்முறை அல்ல. வாட்ஸ்அப் நிறுவனத்தை தன்னிடத்தே கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

வாட்ஸ்அப் செயலி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலேயே, சேவை தடைபடுவதாக தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தற்போது அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளதால், வாட்ஸ்அப் செயலியின் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாட்ஸ்அப் செயலியின் மூலமாகவே, தங்களது நண்பர்கள் மற்றும் பிரியமானவர்களுடன் வீடியோ காலில் பேசிவருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – WhatsApp was down in India; users faced connection and other issues

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp india whatsapp down connection issues login problem facebook

Next Story
ஜிஎஸ்டி எதிரொலி: ஐ-போன் 7, 6எஸ் விலை குறைப்பு; வாங்கலாமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express