மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களை கவரும் வகையில் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர் தங்கள் சேட்-ல் இருந்தே வீடியோ மெசேஜ்களை அனுப்பியும், பெற்றும் கொள்ளலாம்.
இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அம்சம் வாய்ஸ் மெசேஜ் அம்சம் போன்றே இருக்கும். ரெக்கார்டிங் செய்வதும் அதே போன்று இருக்கும். டெக்ஸ்ட் பாக்ஸ் அருகில் உள்ள ஐகானை கிளிக் செய்து வீடியோ மோட்-க்கு மாற்றி வீடியோ பதிவு செய்யலாம்.
அதிகபட்சமாக 1 நிமிடம் (60 நொடி) வீடியோ பதிவு செய்யலாம். ஐகானை மேலே
ஸ்வைப் செய்வதன் மூலம் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வீடியோ பதிவு செய்யலாம்.
வட்ட வடிவில் வீடியோ
இது வழக்கமான போன் கேமரா வீடியோக்கள் போல் அல்லாமல் இந்த இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அம்சம் வேறுபட்டதாக உள்ளது. வீடியோக்கள் வட்ட வடிவில் (circular form) அனுப்பபடும்.
பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அம்சம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் வாட்ஸ்அப்-பை அப்பேட் செய்து பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“