/indian-express-tamil/media/media_files/xg2ykNYSrhRhYsYkCl7m.jpg)
மெட்டாவின் வாட்ஸ்அப், ஜென்-Z மற்றும் மில்லினியல்களை அதிகம் ஈர்க்கும் அற்புதமான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இப்போது வாட்ஸ்அப் வீடியோ கால் வசதியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பேக்ரவுண்ட், ஃபில்டர்ஸ் மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். மேலும் இது வீடியோ கால் வசதிக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பைச் சேர்க்கலாம்.
மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் சேனலில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 10 ஃபில்டர்ஸ் அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. Warm, Cool, Black & White, Light Leak, Dreamy, Prism Light, Fisheye, Vintage TV, Frosted Glass, and Duo Tone எனப் பெயரிட்டுள்ளது.
அதே நேரம், Blur, Living Room, Office, Cafe, Pebbles, Foodie, Smoosh, Beach, Sunset, Celebration, and Forest எனப் 10 பேக்ரவுண்ட் அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப் பேக்ரவுண்ட், ஃபில்டர்ஸ் பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் வீடியோ கால் ஆன் செய்து உங்கள் ஸ்மார்ட்போனின் மேல் வலதுபுறத்தில் உள்ள எஃபெக்ட் ஐகானை கிளிக் செய்யலாம். அதில் பேக்ரவுண்ட், ஃபில்டர்ஸ் தேர்வு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.