இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் உலக முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் குரூப் சேட் அம்சத்தில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட்டில் குரூப் அட்மினுக்கு அதிகாரம் (கன்ட்ரோல்) வழங்கப்பட்டுள்ளது. குரூப்பில் புதிய நபர்கள் இணைவதை அனுமதிப்பது, பயனர்கள் பொதுவாக இருக்கும் குரூப் பக்கங்களை காண்பது என புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் கடந்தாண்டு Communities அம்சத்தை அறிமுகப்படுத்தியது. பல வாட்ஸ்அப் குரூப்களை ஒருக்கிணைக்க இந்த அம்சம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் Communities அம்சம் பெரியதாகவும், நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை உள்ளடக்கியதாகவும்
இருப்பதால், இதனை நிர்வகிக்க குரூப் அட்மினுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, புதிதாக ஒருவர் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மின் அனுமதித்த பின் தான் இணைய முடியும். குரூப் லிங்க் வைத்திருந்தாலும் கூட குரூப் அட்மின் அனுமதி வேண்டும் என்ற வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனுமதிக்கான பட்டியலையும் அட்மின் பார்த்து தேர்ந்தெடுக்கலாம். தொடர்ந்து இரு பயனர்கள் பொதுவாக இருக்கும் குரூப் பக்கங்களையும் காணலாம், இதற்கு வாட்ஸ் அப் பக்கம் சென்று ஒருவரின் பெயர் டைப் செய்தால் நீங்கள் இருவரும் இருக்கும் பொதுவான குரூப் என்னவென்று தெரியும் வகையில் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/