Whatsapp introduces new shopping features : நிறுவனத்தின் வணிக பயன்பாட்டில் கிடைக்கும் புதிய ஷாப்பிங் அம்சங்களை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் இப்போது ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் பதிப்பிலிருந்து பட்டியல்களை உருவாக்கி நிர்வகிக்கும் திறனை வணிகங்களுக்கு வழங்குகிறது.
தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கண்டறிய மக்கள் ஒரு சிறந்த வழியைக் கண்டறிந்துள்ளனர் என்று வாட்ஸ்அப் வலியுறுத்தியது. எனவே அவர்கள் அதை மற்ற தளங்களிலும் கிடைக்கச் செய்ய முடியும்.
“பல வணிகங்கள் தங்கள் சரக்குகளை கணினியிலிருந்து நிர்வகிப்பதால், இந்த புதிய விருப்பம் அவர்களுடைய சேவைகளைச் சேர்ப்பதை விரைவாகவும் எளிதாகவும் செய்யும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள். உணவகம் அல்லது துணிக்கடை போன்ற பெரிய சரக்குகளைக் கொண்ட வணிகங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இதனால், அவர்கள் பெரிய அட்டவணையிலிருந்து தங்கள் கேட்டலாகை நிர்வகிக்க முடியும். வணிகங்கள் தாங்கள் வழங்குவதை எளிதாகக் காண்பிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பட்டியல்கள் அனுமதித்துள்ளன” என்று வாட்ஸ்அப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயனர்கள் வாட்ஸ்அப்பில் 8 மில்லியனுக்கும் அதிகமான வணிக பட்டியல்களை பிரவுஸ் செய்ய முடியும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது. புதிய வாட்ஸ்அப் பிசினஸ் அம்சம் இப்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. வாட்ஸ்அப்பில் கிடைக்காத பொருட்களை மறைக்கவும் ஒரு விருப்பத்தை சேர்த்துள்ளது.
"கடந்த ஆண்டு விடுமுறை ஷாப்பிங் பருவத்தில் நாங்கள் வாட்ஸ்அப்பில் கார்ட் அறிமுகப்படுத்தினோம். இதனால், மக்கள் ஒரு பட்டியலை பிரவுஸ் செய்து, பல தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆர்டரை வணிகத்திற்கு ஒரு செய்தியாக அனுப்பலாம். ஆனால், தற்போது கிடைப்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க அவர்களுக்கு ஒரு சுலபமான வழி தேவை என்று வணிகங்கள் எங்களிடம் கூறியுள்ளன. எனவே, அவை கிடைக்காத அல்லது கையிருப்பில்லாத பொருட்களுக்கான ஆர்டர்களைப் பெறாது. அதனால்தான் நாங்கள் அவர்களுக்கு விருப்பத்தை அளிக்கிறோம்” என்று வாட்ஸ்அப் கூறுகிறது.
வாட்ஸ்அப் பிசினஸ் பயன்பாடு இப்போது விற்பனையாளர்களை தங்கள் பட்டியலிலிருந்து குறிப்பிட்ட பொருள்களை ‘மறைக்க’ அனுமதிக்கிறது. மேலும், அவை மீண்டும் கையிருப்பில் இருக்கும்போது அல்லது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்போது அவற்றை எளிதாகக் காண்பிக்கும். நிறுவனம் ஏற்கெனவே இந்த அம்சத்தை உலகம் முழுவதும் உருவாக்கத் தொடங்கியுள்ளது. நீங்கள் அதைப் பெறவில்லை என்றால், சில நாட்களில் அதைப் பெறுவீர்கள்.
உங்கள் கேட்டலாகில் ஒரு தயாரிப்பு அல்லது சேவையை எவ்வாறு சேர்ப்பது?
ஸ்டெப் 1: வாட்ஸ்அப் பிசினஸ் பயன்பாட்டைத் திறந்து, ‘மேலும்’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
ஸ்டெப் 2: உங்கள் சாட் பட்டியலின் மேலே, நீங்கள் அழுத்த வேண்டிய ‘கேட்டலாக்’ இருப்பதைக் காண்பீர்கள்.
ஸ்டெப் 3: உங்கள் புகைப்படங்களிலிருந்து படங்களை பதிவேற்ற புதிய பொருளை சேர்> படங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யுங்கள். வாட்ஸ்அப் 10 படங்களை பதிவேற்ற அனுமதிக்கிறது.
ஸ்டெப் 4: ஒரு தயாரிப்பு அல்லது சேவை பெயரை வழங்கவும். பதிவேற்றிய தயாரிப்புக்கான விலை, விளக்கம், இணைப்பு மற்றும் பொருளின் குறியீடு போன்ற விருப்ப விவரங்களையும் நீங்கள் வழங்கலாம். உங்கள் பட்டியலில் தயாரிப்பைச் சேர்க்க நீங்கள் ‘கேட்டலாகில் சேர்’ என்பதைத் க்ளிக் செய்யவேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil