மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வாட்ஸ்அப்பிற்கான புதிய அம்சத்தை அறிவித்துள்ளார். இது பயனர்கள் வீடியோ கால் செய்யும் போதே ஸ்கிரீன் ஷேர் செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சம் கிராஸ்-பிளாட்ஃபார்ம் உடனானது. பயனர்கள் எளிதாக ஸ்கிரீன் ஷேர் செய்ய அனுமதிக்கிறது. குரூப் வீடியோ காலிலும் இந்த அம்சம் பயன்படுத்தப்படும்.
வேலை தொடர்பான ஆவணங்கள், குடும்பத்தினருடன் புகைப்படங்கள், விடுமுறை நாட்களுக்கு ப்ளான் செய்வது, நண்பர்களுடன் ஆன்லைனில் ஷாப்பிங், தாத்தா பாட்டிக்கு தொழில்நுட்பத்தை சொல்லிக் கொடுக்க இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
இந்த அம்சத்தை பயன்படுத்த முதலில் உங்கள் பேனை சமீபத்திய வாட்ஸ்அப் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். வீடியோ கால் பேசும் போது ஸ்கீரினுக்கு கீழ் ‘Share’ ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்து ஸ்கீரின் ஷேர் செய்வதற்கான பர்மிஸன் கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் இப்போது உங்கள் ஸ்கீரின் ஷேர் செய்யப்படும்.
இந்த அம்சம் தற்போது அனைவருக்கும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் landscape mode-ம் ஸ்கீரின் ஷேர் செய்ய அனுமதிக்கிறது. டெஸ்க்டாப்-ல் (கணினி, லேப்டாப்) இருந்து ஸ்கீரின் ஷேர் செய்யப்படும் போது இந்த மோட் பயன்படும்.
வாட்ஸ்அப் ஸ்கீரின் ஷேரிங் அம்சம் குரூப் காலிலும் பயன்படுத்தப்படுகிறது. இது professional- ஆக உள்ளது. கூகுள் மீட், ஜூம் பயன்படுத்தும் பயனர்கள் இப்போது வாட்ஸ்அப்பில்லேயே இந்த அம்சதை பயன்படுத்தலாம்.