செம்ம அப்டேட்: வாட்ஸ்அப் வாய்ஸ் கால்- வீடியோ காலுக்கு இனி மொபைல் வேண்டாம்

Whatsapp introduces video and voice calling from desktop புத்தாண்டு தினத்தன்று, ஒரே நாளில் 1.4 பில்லியன் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் பெற்று தனது சொந்த சாதனையை வாட்ஸ்அப் முறியடித்தது.

Whatsapp introduces video and voice calling from desktop app Tamil News
Whatsapp introduces video and voice calling from desktop app Tamil News

Whatsapp introduces video and voice calling from desktop app : விண்டோஸ் பிசி மற்றும் ஆப்பிளின் மேக்ஸிற்கான டெஸ்க்டாப் பயன்பாட்டில் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளுக்கான ஆதரவை வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாகச் சேர்த்திருக்கிறது. இந்த அம்சம், செயல்பாட்டு வேலைகளில் இருப்பதாக நீண்ட காலமாக வதந்தி பரவியது. மேலும், இப்போது அதனை வாட்ஸ்அப் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த அம்சம் இன்று பயனர்களுக்காக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இப்போது, டெஸ்க்டாப் பயன்பாட்டில் ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப் அழைப்புகளைச் சேர்க்கிறது. எதிர்காலத்தில் குழு வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளைச் சேர்க்க இந்த அம்சத்தை விரிவுபடுத்தப்போவதாக நிறுவனம் கூறுகிறது.

ஓர் வலைப்பதிவு போஸ்ட்டில், வாட்ஸ்அப்பில் ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்வதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதைக் கண்டதாகக் கூறுகிறது. அதிலும் பெரும்பாலும் நீண்ட உரையாடல்களுக்கு. அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. புத்தாண்டு தினத்தன்று, ஒரே நாளில் 1.4 பில்லியன் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் பெற்று தனது சொந்த சாதனையை வாட்ஸ்அப் முறியடித்தது.

மேலும், இந்த பிளாட்ஃபார்மில் உள்ள வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் மற்ற செய்திகளைப் போலவே இறுதி முதல் குறியாக்கம் (end-to-end encrypted) செய்யப்படுகின்றன என்பதை வாட்ஸ்அப் குறிப்பிடுகிறது.

மேலும், “ஒரு பெரிய திரையில் பதிலளிப்பது சக ஊழியர்களுடன் பணியாற்றுவதை எளிதாக்குகிறது. உங்கள் குடும்ப உறுப்பினரைப் பெரிய ஸ்க்ரீனில் தெளிவாகப் பார்க்கவும் அல்லது பேசும்போது உங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுக்கவும் இது உதவுகிறது” என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

இந்தப் புதிய அம்சம் போர்ட்ரெயிட் மற்றும் லேண்ட்ஸ்கேப் இரண்டிலும் செயல்படும். டெஸ்க்டாப்பில் அழைப்பது உங்கள் கணினித் திரையில் மறு அளவிடத்தக்க முழுமையான சாளரத்திலும் தோன்றும். ஒரு பயனர் தங்கள் வீடியோ சாட்களை தொந்தரவு செய்யாதபடி அழைப்பு எப்போதும் சாளரத்தின் மேலே இருக்கும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

உங்கள் டெஸ்க்டாப் அல்லது கணினியில் வாட்ஸ்அப் அழைப்பதற்கான பின்வரும் தேவையை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எந்த சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து விண்டோஸ் 10, 64-பிட் பதிப்பு 1903 மற்றும் புதிய அல்லது macOS 10.13 மற்றும் புதியது உள்ளிட்டவை தேவைப்படும்.

வாட்ஸ்அப் அழைப்புக்கு மனதில் கொள்ள வேண்டிய பிற அம்சங்கள்

வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஆடியோ வெளியீட்டுச் சாதனம் மற்றும் மைக்ரோஃபோன்.

வீடியோ அழைப்புகளுக்கான கேமரா.

உங்கள் கணினி மற்றும் தொலைபேசியில் செயலில் உள்ள இணைய இணைப்பு. அழைப்பு உங்கள் தொலைபேசி வழியாகச் செல்லாது. ஆனால் அழைப்பை நிறுவ ஆன்லைனில் இருக்க வேண்டும்.

உங்கள் கணினியின் மைக்ரோஃபோன் மற்றும் கேமராவை அணுக வாட்ஸ்அப் அனுமதி வழங்குவதை உறுதிசெய்க. வாட்ஸ்அப்பிற்கு அழைப்புகளுக்கான உங்கள் கணினியின் மைக்ரோஃபோனுக்கும் வீடியோ அழைப்புகளுக்கான கேமராவிற்கும் அணுகல் தேவை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp introduces video and voice calling from desktop app tamil news

Next Story
வீடியோக்களை அனுப்பும்போது இனி அந்த பயம் வேண்டாம்: வாட்ஸ் அப் லேட்டஸ்ட் அப்டேட்Whatsapp new feature lets you mute videos before sending Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express