/indian-express-tamil/media/media_files/ouYQw6JeFIEguhC8uLxQ.jpg)
மெட்டா தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் ஏ.ஐ-ல் இயங்கும் அம்சங்களை படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் ஏ.ஐ-ல் இயங்கும் சாட்போட் சோதனை செய்து வருகிறது.
முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மெட்டா கனெக்ட் 2023 நிகழ்ச்சியில் வாட்ஸ்அப்-ல் ஏ.ஐ சாட்போட் (AI powered chatbot) அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் நிறுவனம் இந்த அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் ஷேட் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஏ.ஐ ஷேட் பட்டன் ஷேட் பக்கத்தின் மேலே ‘New Chat’ பட்டன் பக்கத்தில் இடம் பெறுகிறது. இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டாவின் AI சாட்போட் என்ன செய்யும்?
இந்த ஆண்டு செப்டம்பரில், Meta தனது புதிய ChatGPT போன்ற பொது-நோக்க AI சாட்போட்டை வெளியிட்டது. இது பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது முதல் உங்களின் அடுத்த ட்ரிப் திட்டமிடுதல் வரை அனைத்தையும் செய்யும். மேலும் மெட்டா மைக்ரோசாப்டின் Bing Chat உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இது சாட்போட்க்கு உதவும் படியான ரியல் டைம் வைப் ரிசஸ்ட் கொடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.