WhatsApp Web Features: ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதை நாம் அறிந்திருப்போம். ஆனால், சமிபத்தில் வாட்ஸ்ஆப் வெப் பயன்பாட்டிற்காக இரண்டு சுவாரஸ்யமான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. வாட்ஸ் ஆப் வெப் பயனர்கள் மிஸ் பண்ணக்கூடாத வசதிகள் அவை.
ஆல்பங்கள்: வாட்ஸ்ஆப் வெப்பில் பயன்படுத்தக் கூடிய ஆல்பங்களை தயார் செய்து கொண்டிருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதன் மூலம் நமக்கு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரே அட்டைக்குள் வைப்பதன் மூலம் நமது சட் ஸ்பேஸ் (chat space) இடத்தை சேமிக்க முடியும்.
இந்த அம்சம் கடந்த ஆண்டே iOS மற்றும் Android ஸ்மார்ட் போன்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது, வாட்ஸ்ஆப் வெப் வசதிக்காக முயற்சி செய்து வருகிறது.
WhatsApp features
குரூப்டு ஸ்டிக்கர்கள்: இந்த அம்சத்தின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்க்குமேற்ப்பட்ட ஸ்டிக்கர்களை எளிதில் தொகுக்க அனுமதிக்கிறது. இதன் மூலம், பல ஸ்டிக்கர்களை ஒரேநேரத்தில் பிறர்க்கு அனுப்பமுடியும். ஆல்பங்களும் இந்த குரூப்டு ஸ்டிக்கர்களும் கிட்டத்தட்ட ஒன்றே. இந்த அம்பசம் ஸ்டிக்கர்களுக்காக மட்டும் வடிவமைக்கப் பட்டதாகும்.
WhatsApp Web features
இந்த இரண்டு அம்சங்களும் தற்போது தான் வாட்ஸ்ஆப் தயார் செய்து கொண்டுவருகிறது. இன்னும் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யவில்லை.