Whatsapp is rolling out voice waveforms for chat bubbles Tamil News : அனைத்து வாய்ஸ் /ஆடியோ செய்திகளுக்கும் சாட் பபுல் புதிய வாய்ஸ் அலை வடிவமைப்பை வாட்ஸ்அப் வெளியிடத் தொடங்கியுள்ளது என்று WABetainfo தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு புதுப்பிப்பு வெளிவரத் தொடங்கும் என்று அறிக்கை கூறுகிறது. எனவே நீங்கள் பீட்டா புதுப்பிப்பில் இருந்தாலும், உடனடியாக மாற்றத்தைக் காண முடியாது.
அறிக்கையின்படி, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இந்த அம்சம் இயக்கப்பட்டால், அவர்களின் வாய்ஸ் செய்திகளுக்கான வாய்ஸ் அலைவடிவங்களைப் பார்க்க முடியும். இருப்பினும், அம்சம் இயக்கப்படாத ஒருவரிடமிருந்து வாய்ஸ் நோட்டை பெறும்போது அது காட்டப்படாமல் போகலாம்.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வாய்ஸ் அலைவடிவம் மட்டும் வாட்ஸ்அப் இயங்குதளத்தில் செயல்படும் புதிய அம்சம் அல்ல. மெட்டாவுக்குச் சொந்தமான இந்த செய்தியிடல் பயன்பாடு, சாட் பபுல் முழுவதுமாக மறுவடிவமைப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய அறிக்கையின்படி, iOS பீட்டா பயனர்களுக்காக இந்த அம்சம் சோதிக்கப்படுகிறது என்றிருந்தது. மேலும், இந்த பெரிய வடிவமைப்பு மாற்றம் அனைவருக்கும் வெளிவருவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.
பயனர்கள், எமோஜிகள் மூலம் செய்திகளுக்கு எதிர்வினையாற்றக்கூடிய புதிய அம்சத்திலும் இது செயல்படுகிறது. இது ஏற்கனவே Facebook Messenger, Instagram Direct Messaging-ல் பார்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் தாங்கள் பதிலளிக்க விரும்பும் செய்தியை க்ளிக் செய்து நீண்ட நேரம் பிடித்திருந்த பின்னர் பொருத்தமான எமோஜியை இழுக்க அனுமதிக்கும். இது வெளிவந்தவுடன் தனிநபர் மற்றும் குழு சாட்கள் இரண்டிற்கும் கிடைக்கும்.
இறுதியாக, ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கான தனிப்பயன் தனியுரிமை அமைப்புகளிலும் வாட்ஸ்அப் செயல்படுகிறது. இது தனியுரிமை அமைப்புகளில் புதிய "எனது தொடர்புகள் தவிர" விருப்பத்தைச் சேர்க்கும். இது, குறிப்பிட்ட தொடர்புகளுக்கு மட்டும் last seen அமைக்கப் பயனர்களை அனுமதிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil