போன் ஸ்டோரேஜை காலி செய்யும் வாட்ஸ்அப்... தடுப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!

வாட்ஸ்அப் மீடியா பைல்ஸ் (புகைப்படங்கள்/வீடியோக்கள்) தானாகவே போன் கேலரியில் சேமிக்கப்பட்டு, உங்க போனின் ஸ்டோரேஜை விரைவாக நிரப்புகின்றன. இந்த ஒரு செட்டிங் மாற்றினால், இனி எந்தச் சாட்டிலிருந்தும் (Chat) மீடியா பைல்ஸ் தானாக உங்க கேலரிக்கு வராது.

வாட்ஸ்அப் மீடியா பைல்ஸ் (புகைப்படங்கள்/வீடியோக்கள்) தானாகவே போன் கேலரியில் சேமிக்கப்பட்டு, உங்க போனின் ஸ்டோரேஜை விரைவாக நிரப்புகின்றன. இந்த ஒரு செட்டிங் மாற்றினால், இனி எந்தச் சாட்டிலிருந்தும் (Chat) மீடியா பைல்ஸ் தானாக உங்க கேலரிக்கு வராது.

author-image
Meenakshi Sundaram S
New Update
WhatsApp Storage Management

போன் ஸ்டோரேஜ் காலி செய்யும் வாட்ஸ்அப்... தடுப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!

"என் போன் ஏன் இவ்வளவு மெதுவாக இருக்கிறது?", "ஸ்டோரேஜ் ஏன் இவ்வளவு சீக்கிரம் நிரம்பிவிட்டது?" என்று நீங்க யோசிக்கிறீர்களா? இதற்கு காரணம் உங்க வாட்ஸ்அப்தான். ஆம்!

Advertisment

வாட்ஸ்அப் குரூப் சாட்களில் வரும் தேவையற்ற மீம்ஸ்கள், குட் மார்னிங் வீடியோக்கள், சம்பந்தமே இல்லாத ஃபார்வர்ட் மெசேஜ்கள்... இவை அனைத்தும் உங்க அனுமதி இல்லாமலேயே, ஆட்டோமேட்டிக்காக உங்க பைலை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில வாரங்களில், உங்க போனின் கேலரியைத் திறந்து பார்த்தால், உங்களுக்குத் தொடர்பே இல்லாத நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் குவிந்திருப்பதைக் கண்டு நீங்க நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள்.

உங்களில் பலரும், "நான் சேமிக்காத இத்தனை புகைப்படங்களும் வீடியோக்களும் எங்கிருந்து வந்தன?" என்று குழப்பமடைந்திருக்கலாம். தேவையற்ற இந்த மீடியா குப்பைகள் உங்கள் போனில் கணிசமான இடத்தை அடைத்து, ஸ்டோரேஜை காலி செய்கின்றன. இதன் விளைவாக, நீங்க உண்மையிலேயே சேமிக்க நினைத்த முக்கியமான பைல்கள், சொந்தப் புகைப்படங்களையோ கண்டுபிடிப்பது கடினமாகிவிடுகிறது. கவலை வேண்டாம். வாட்ஸ்அப்பே இந்தச் சிக்கலுக்கு அருமையான தீர்வை வைத்துள்ளது. உங்க போனில் உள்ள மீடியா பைல்ஸ் தானாகக் கையாளப்படும் விதத்தை நீங்க முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். எப்படித் தெரியுமா?

உங்க போனின் ஸ்டோரேஜ் எப்போதும் நிரம்பாமல் இருக்க, வாட்ஸ்அப் மீடியா தானாகச் சேமிக்கப்படுவதை உடனடியாக நிறுத்தலாம். இந்த ஒரு செட்டிங் மாற்றினால், இனி எந்தச் சாட்டிலிருந்தும் (Chat) மீடியா பைல்ஸ் தானாக உங்க கேலரிக்கு வராது. வாட்ஸ்அப்பில், மேலே உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும். அதில் 'அமைப்புகள்' (Settings) > 'அரட்டைகள்' (Chats) பகுதிக்குச் செல்லவும். அங்கு இருக்கும் 'மீடியா தெரிவுநிலை' (Media Visibility) என்பதை ஆஃப் (Off) செய்து விடுங்கள். இந்த செட்டிங்கை மாற்றுவதால், ஏற்கனவே சேமிக்கப்பட்ட பைல்ஸ் நீங்காது. ஆனால், இனிமேல் வரும் பைல்ஸ் தானாகச் சேமிக்கப்படாது.

Advertisment
Advertisements

முக்கியமான நண்பர்களிடமிருந்து வரும் மீடியா மட்டும் சேமிக்கப்பட்டால் போதும் என்று நினைத்தால், குரூப் சாட் அல்லது தனிநபர் சாட்டுக்கு செல்லவும். மேலே உள்ள அவர்கள் பெயரின் மீது தட்டவும். 'மீடியா தெரிவுநிலை' (Media Visibility) என்பதைத் தேர்வு செய்து, அதில் 'இல்லை' (No) என்பதைக் கொடுத்து 'சரி' (OK) செய்யவும்.

வாட்ஸ்அப் மீடியா சேவ் ஆவதைத் தடுத்தாலும், ஏற்கனவே இருக்கும் பழைய வாட்ஸ்அப் படங்கள் கேலரியில் தெரிகிறதா? ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் ரகசிய ட்ரிக். .nomedia பைல் ஒன்றை உருவாக்குங்கள். பிளே ஸ்டோரில் இருந்து ஒரு File Explorer ஆப்-ஐ இன்ஸ்டால் செய்யவும். அந்த ஆப்பில் Pictures/WhatsApp Images/ என்ற பைலைத் தேடிச் செல்லவும். அந்த பைலில் நீங்க ஒரு புதிய பைல் (New File) உருவாக்கி, அதற்கு .nomedia (கண்டிப்பாக புள்ளி (.) இருக்க வேண்டும்) என்று பெயரிடவும். அவ்வளவுதான். இனி உங்க போனின் கேலரியில் வாட்ஸ்அப் படங்கள் எதுவுமே காட்டப்படாது. உங்க கேலரி சுத்தமாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் இந்த .nomedia கோப்பை அழித்துவிட்டு மீண்டும் படங்களைப் பார்க்கலாம்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: