வாட்ஸ்அப் சமீபத்திய மாதங்களில் அதன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்த புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் லாக்கின் வசதியில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
புதிதாக வாட்ஸ்அப் லாக்கின் (Log in) செய்ய போன் நம்பர் பயன்படுத்தப்படும். தற்போது இதற்கு கூடுதலாக இ-மெயில் ஐ.டி பயன்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக வாட்ஸ்அப் லாக்கின் செய்ய போன் நம்பர் பயன்படுத்தப்படும்.
எஸ்.எம்.எஸ் (SMS) அல்லது போன் கால் மூலம் வெரிவிக்கேஷன் கோட் அனுப்பபட்டு சரிபார்க்கப்பட்ட பின் வாட்ஸ்அப் லாக்கின் செய்யப்படும். இருப்பினும், இந்த நடைமுறையின் போது சில சிக்கல்கள் உள்ளதாக பயனர்கள் தெரிவித்தனர். போன், சிம் தொலைந்துவிட்டாலோ அல்லது சிக்னல் பிரச்சனையினால் வெரிவிக்கேஷன் கோட் பெறமுடியாமல் போகும் சூழல் உள்ளதாக தெரிவித்தனர். அந்தவகையில் தற்போது போன் நம்பர் லாக்கின் உடன் இ-மெயில் ஐ.டி பயன்படுத்தும் அம்சமும் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பீட்டா வெர்ஷன் v2.23.16.15 என்ற வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“