உங்க ப்ரைவசி மட்டும் தான் எங்களுக்கு முக்கியம் : வாட்ஸ்ஆப்பின் சூப்பர் 5 அப்டேட்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
whatsapp private chats tips to secure private groups

whatsapp private chats tips to secure private groups

WhatsApp Latest updates Facebook Story integration : வாட்ஸ்ஆப் தற்போது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இம்முறை வெளியான அறிவிப்புகள் ஒரு பார்வை

ஃபேஸ்புக் ஸ்டோரி இண்டெக்ரேசன் (Facebook Story integration)

Advertisment

தற்போது வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக்கிலும் ஷேர் செய்யும் வசதி வந்துள்ளது. வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் ஃபேஸ்புக் ஸ்டோரியாக ஷேர் செய்வதற்கான ஆப்சன் தற்போது வந்துள்ளது.

ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் (Fingerprint unlock)

வாட்ஸ்ஆப் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சிறப்பம்சங்கள் ஆப்பிளின் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ் அன்லாக் மூலமாகவும் வாட்ஸ்ஆப்பை செயல்படுத்த முயலும். ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் ஃபீச்சர் எனேபில் செய்த பின்பு வாடிக்கையாளர்கள் தங்களின் நோட்டிஃபிகேசனில் வரும் கண்டெண்ட்டுகளை மறைக்கவும் முடியும்.

ஃப்ரீக்குவெண்ட்லி ஃபார்வர்டேட்  (Frequently forwarded)

5க்கும் மேற்பட்ட முறை பகிரப்படும் செய்திகள் Frequently forwarded என்ற டேக்குடன் மற்றவர்களுக்கு சென்று சேரும். அளவுக்கு அதிகமாக ஷேர் செய்யப்பட்டால் அவை ஸ்பேம் மெசேஜாகவும் இருக்கலாம் என்று வாடிக்கையாளர்கள் அறிய வசதியாக இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

கான்ஸ்க்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜ்கள் (Consecutive voice messages)

Advertisment
Advertisements

ஒருவர் அனுப்பிய ஒலிக்குறுஞ்செய்திகளை தொடர்ச்சியாக கேட்கும் வசதியை இந்த அப்டேட் உங்களுக்கு தரும். எனவே நீங்கள் ஒவ்வொரு மெசேஜ்ஜையும் ப்ளே செய்து கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.

க்ரூப் இன்விடேசன் (Group invitation)

உங்களின் விருப்பம் இல்லாமல் உங்களை இனி யாராலும் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இணைக்க இயலாது. இதற்கான செட்டிங்க்ஸ்லில் நோபடியை தேர்வு செய்தால், யாரும் உங்களை எந்த க்ரூப்பிலும் இணைக்க இயலாது. அந்த இன்விடேசன் ரெக்வஸ்ட்டும் மூன்றே நாட்களில் காலாவதி ஆகிவிடும். மை காண்டாக்ட்ஸ் என்றால், உங்கள் காண்டாக்ட்டில் இருக்கும் நபர்கள் உங்களை க்ரூப்பில் இணைக்க இயலும்.

மேலும் படிக்க : இந்த வாரம் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வாரம்... 9 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கும் விவோ

Whatsapp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: