scorecardresearch

வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சத்தை கவனித்தீர்களா? வாய்ஸ் செய்திகளுக்காக ஃபாஸ்ட் பிளேபேக் அறிமுகம்!

Whatsapp launches fast playback for voice messages how to use சில நேரங்களில் பயனர்கள் மிக நீண்ட செய்தியை அனுப்பும்போது, மற்ற தரப்பினருக்கு அதைக் கேட்க நேரம் இருக்காது…

Whatsapp launches fast playback for voice messages how to use Tamil News
Whatsapp launches fast playback for voice messages how to use Tamil News

Whatsapp launches fast playback for voice messages how to use Tamil News : அனைத்து வாய்ஸ் செய்திகளுக்கும் ‘ஃபாஸ்ட் பிளேபேக்’ என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சேர்க்கிறது. ஆடியோ அல்லது வாய்ஸ் அடிப்படையிலான செய்திகள், இந்தப் பயன்பாட்டில் பிரபலமான அம்சம். குறிப்பாகப் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தொழில்நுட்ப ஆர்வலர்களாகவோ அல்லது டைப் செய்யாமலோ இருக்கலாம். இந்த ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம், வாய்ஸ் செய்திக்கான பின்னணி வேக அமைப்பை மாற்ற அனுமதிக்கும்.

நிறுவனத்தின் அறிக்கையின்படி, பயனர்கள் ஒருவரின் குரலின் பிட்ச்சை மாற்றாமல் இயல்புநிலை 1x அமைப்பிலிருந்து 1.5x வேகம் அல்லது 2x வேகத்திற்குத் தேர்வு செய்ய முடியும். வாட்ஸ்அப் இந்த அம்சத்தை சேர்ப்பதற்கான ஒரு காரணம், சில நேரங்களில் பயனர்கள் மிக நீண்ட செய்தியை அனுப்பும்போது, மற்ற தரப்பினருக்கு அதைக் கேட்க நேரம் இருக்காது என்பதனால்தான்.

ஃபாஸ்ட் பிளேபேக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம், செய்தியை விரைவுபடுத்தவும் மற்றும் நீண்ட வாய்ஸ் செய்திகளைக் கேட்க எடுக்கும் நேரத்தைக் குறைக்கவும் உதவும் என்று அறிக்கைக்கு மேலும் கூறுகிறது.

இந்த அம்சம் இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ன் சமீபத்திய புதுப்பிப்பு இந்த புதிய அம்சத்தை உறுதிப்படுத்துகிறது.

வாட்ஸ்அப்பில் ஃபாஸ்ட் பிளேபேக் செய்திகளை எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் ஒரு வாய்ஸ் செய்தியைப் பெறும்போது, பின்னணி வேகம் தோன்றுவதைக் காண்பீர்கள். இது இயல்பாக 1x ஆக அமைக்கப்படுகிறது. வேகத்தை 1.5x அல்லது 2x ஆக அதிகரிக்க வேகத்தை க்ளிக் செய்யவும். பின்னர் வெறுமனே பிளே பட்டனை க்ளிக் செய்யவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp launches fast playback for voice messages how to use tamil news