மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அப்டேட்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஹெச்.டி தரத்தில் போட்டாகளை அனுப்ப அனுமதித்த நிலையில் தற்போது ஹெச்.டி வீடியோகளையும் (HD Videos) அனுப்பும் படி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
Advertisment
இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. HD போட்டோஸ் எப்படி அனுப்ப முடிகிறதோ அதேபோல் தான் HD வீடியோக்களும் அனுப்பவும், பெறவும் முடியும். தற்போது வரை 420p தரத்தில் வீடியோ அனுப்பபட்டு வந்த நிலையில் இந்த அம்சம் மூலம் 720p தரத்தில் வீடியோக்களை அனுப்பலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உங்கள் போன் வாட்ஸ்அப்-பை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ளவும்.
யாருக்கு வீடியோ ஷேர் செய்ய வேண்டுமோ அந்த ஷேட் பக்கத்தை ஓபன் செய்து எப்போதும் போல் வீடியோவை செலக்ட் செய்யவும்.
இப்போது வீடியோ ஷேர் செய்யும் பக்கத்தில் மேலே இடதுபுறத்தில் ‘HD’ என்று இருக்கும். அந்த பட்டனை கிளிக் செய்து பின்னர் ‘HD Quality’ என்பதை கிளிக் செய்து வீடியோவை ஷேர் செய்யலாம்.
ஹெச்.டி போட்டாஸ் எப்படி ஷேர் செய்தோமோ அதே போல் தான் இந்த அம்சமும் உள்ளது. மற்ற அம்சங்களைப் போல் இந்த அம்சமும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனுப்பிய HD வீடியோவை நீங்கள் பெறும்போது ‘HD‘ பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த வசதி தற்போது அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”