scorecardresearch

தனி ஆப் வேண்டாம்… காதலர் தின ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்!

WhatsApp launches Valentine’s day sticker pack: வாட்ஸ்அப் நிறுவனம் காதலர் தின ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது.

தனி ஆப் வேண்டாம்… காதலர் தின ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்!

காதலர் தின சிறப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் காதலர் தின ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. சேட், காலிங் வசதி, வீடியோ காலிங் வசதி எனப் பல வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக ஒரு சேட்-டிற்கு ரியாக்க்ஷன் கொடுக்கும் வகையில் இமேஜி மற்றும் ஸ்டிக்கர் அம்ச வசதி உள்ளது.

ஸ்டிக்கர் வசதி பலரது வரவேற்பை பெற்றுள்ளது. காமெடி ஸ்டிக்கர் தொடங்கி வாழ்த்து ஸ்டிக்கர் வரை பல உள்ளன. அந்த வகையில் காதலர் தின சிறப்பாக வாட்ஸ்அப் நிறுவனமே காதலர் தின ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக ஸ்டிக்கர் பேக்குகள் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் தனி செயலியாக டவுன்லோடு செய்யப்படும். ஆனால் தற்போது வாட்ஸ்அப் செயலியிலேயே காதலர் தின சிறப்பு ஸ்டிக்கர் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் காதலர் தின ஸ்டிக்கர் பேக் டவுன்லோடு செய்வது எப்படி?

  1. வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் என இரண்டு போன்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி. முதலில் வாட்ஸ்அப் ஓபன் செய்து, யாருக்கு ஸ்டிக்கர் அனுப்ப வேண்டுமோ அவர்களின் சேட் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. இப்போது கீழே எப்போதும் போல் ஸ்டிக்கர் பக்கம் சென்று அங்குள்ள ப்ளஸ் (+) ஐகானை கிளிக் செய்து love or Valentine’s day என கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் பேக்கை கிளிக் செய்யவும்.
  3. அடுத்து டவுன்லோடு ஐகானை கிளிக் செய்து டவுன்லோடு கொடுத்தால் ஸ்டிக்கர் பேக் டவுன்லோடு ஆகி விடும். அதை உங்கள் வாட்ஸ்அப்பில் சேட் செய்து பயன்படுத்தலாம்.

இதேபோல் ஆப் ஸ்டோர்களில் மூன்றாம் தரப்பு செயலி பயன்படுத்தியும் ஸ்டிக்கர் டவுன்லோடு செய்யலாம். ஆப்பின் ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரில் Sticker.ly, Sticker Maker + Stickers, Stickles, Wsticker போன்ற செயலிகளிலும் உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர் பேக்குகளை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். விதவிதமான Valentine’s theme ஸ்டிக்கர்களையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp launches valentines day sticker pack how to download and send

Best of Express