வாட்ஸ் அப் நிறுவனம், யூசர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக புதிய அப்டேட் மூலம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
இன்றைய தொழில் நுட்ப உலகில் வாட்ஸ் அப்பிற்கு என தனி இடம், எல்லோர் மனதிலும் இருக்க தான் செய்கிறது. ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களை தாண்டி, மெசேஜ் செயலியான வாட்ஸ் அப் இன்றைய இளைஞர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.
யூசர்களை தொடர்ந்து கவரும் வகையில், வாட்ஸ் அப் நிறுவனமும், ஸ்டேட்டஸ் வசதி, பணப்பரிவர்த்தனை வசதி, மெசேஜ் டெலிட் வசதி என தொடர்ந்து ஒவ்வொன்றாக அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது புதிய வசதி ஒன்று அப்டேட் செய்யப்படவுள்ளது. வாட்ஸ் அப்பிற்குள் செல்லாமலே, குறிப்பிட்ட நபர்களுக்கு யூசர்களால் மெசேஜ் செய்ய முடியும்.
கூடிய விரைவில், 'wa.me' என்கிற ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் பதிவு வாட்ஸ் அப் பயன்பாடு செயல்படவுள்ளது. api.whatsapp.com எனும் ஒரு குறுகிய டொமைன் வழியாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தினால் யூசர்களால் இந்த வசதியை உபயோகப்படுத்த முடியும்.
2.18.138 அப்டேட் வெர்ஷனில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. https://wa.me/ என்கிற டொமைனை டைப் செய்தும் அதனுடன் மொபைல் எண்ணை இணைக்கவும். பின்பு, தேவைப்படும் பொதெல்லாம் யூசர்கள் வாட்ஸ் அப்பிற்குள் செல்லாமல், இதன் மூலமே, பதிவு செய்துள்ள எண்ணிற்கு மெஷே அனுப்ப முடியும். அல்லது மெசேஜ் சாட்டிங்கையும் பார்க்க முடியும்.