Whatsapp may not force you to accept new privacy policy Tamil News : வாட்ஸ்அப் விரைவில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிடும் என்று கூறப்படுகிறது. இது பயனர்களுக்கு அதன் புதிய தனியுரிமை விதிமுறைகளை விருப்பமாக மாற்றும். அதாவது, WaBetaInfo-ன் புதிய அறிக்கை பயனர்கள் புதிய தனியுரிமை விதிமுறைகளை ஏற்கக் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தப் புதிய பாலிசியை நிராகரிக்க ஒரு விருப்பம் இருக்கும் மற்றும் வாட்ஸ்அப் செயல்பாட்டை மட்டுப்படுத்தாது.
இருப்பினும், கிளவுட் வழங்குநர்களைப் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் வணிகக் கணக்குகளுக்குச் செய்தி அனுப்ப விரும்புவோர் புதிய சேவை விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து ஏற்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. வணிகக் கணக்குகளுடன் தொடர்பு கொள்ளாதவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரம், ஒரு ஸ்கிரீன் ஷாட் வழியாகப் பகிர்ந்துள்ளது. இது யாராவது வணிகக் கணக்குகளுக்குச் செய்தி அனுப்ப முயற்சி செய்யும்போது இந்தப் பயன்பாடு புதிய விதிமுறைகளையும் சேவைகளையும் வழங்கும் என்பதைக் காட்டுகிறது.
அந்த செய்தியில், “வாட்ஸ்அப் சமீபத்தில் அதன் விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் புதுப்பித்தது. சாட்களை நிர்வகிக்க வணிகம், ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பான சேவையைப் பயன்படுத்துகிறது. வணிகத்துடன் கலந்துரையாட, வாட்ஸ்அப் புதுப்பிப்பை மதிப்பாய்வு செய்து ஏற்கவேண்டும். பயனர்கள் 'இப்போது வேண்டாம்' மற்றும் 'ரிவ்யூ' உட்பட இரண்டு விருப்பங்களைக் காண்பார்கள்.
இந்த செய்தியை "மிக விரைவில்" அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது என்றும் அது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு வாட்ஸ்அப் பீட்டாவில் ஒரு புதுப்பிப்பை வெளியிடும் என்றும் WABetaInfo வலியுறுத்தியுள்ளது.
பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பேஸ்புக் தயாரிப்புகளில் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதற்காகத் தனது புதிய சேவை விதிமுறைகளை முதலில் அறிவித்தது. பின்னர் வாட்ஸ்அப் பெரும் பின்னடைவை எதிர்கொண்டது மற்றும் நிறையப் பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற பிற பயன்பாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். புதிய கொள்கையை ஏற்காதவர்கள் பயன்பாட்டின் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்அப் பின்னர் கூறியது.
வாட்ஸ்அப் பின்னர் இதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எனவே, மக்கள் விதிமுறைகளை ஏற்காவிட்டாலும் அனைத்து அம்சங்களுக்கும் அணுகலை வழங்க சேவை முடிவு செய்தது. இப்போது, உடனடி செய்தி சேவை பயனர்களுக்கு புதிய விதிமுறைகளை ஒப்புக்கொள்வதை விருப்பமாக்கும் என்று தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.