Whatsapp new option for disappearing messages soon Tamil News : வாட்ஸ்அப் ஒரு புதிய விருப்பத்தைச் சேர்க்க உள்ளது. இது பயனர்கள், செய்திகளை அனுப்பிய 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே அழித்துவிடும். மேலும், வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செய்திகளை அனுப்பிய ஏழு நாட்களுக்குப் பிறகும் காணாமல் போகும்படி அமைக்கலாம். WABetaInfo-ன் அறிக்கையின்படி, இந்த அம்சத்தின் செயல்பாட்டை எதிர்காலத்தில் விரிவாக்க வாட்ஸ்அப் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வாட்ஸ்அப்பில் ஏழு நாட்களில், அனுப்பிய செய்தி காணாமல் போகும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, “உரையாடல்கள் நிரந்தரமானவை அல்ல” என்று நிறுவனம் கூறியது. இந்த அம்சத்தைப் பொறுத்தவரை மேலும் செயல்பாட்டை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
24 மணி நேரச் செய்தி காணாமல் போகும் விருப்பம், ஒரு மாத காலமாக உருவாக்கும் முயற்சியில் உள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தளத்தால் பதிவேற்றப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள், ஐபோனில் சோதனை செய்யப்படுவதைக் காண்பித்தாலும், புதிய விருப்பம் ஆண்டிராய்டு பயன்பாட்டிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய விருப்பம் தற்போதுள்ள 7 நாள் விருப்பத்திற்குக் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வழியில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட சாட்டில் உள்ள போஸ்டுகள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு நீக்கப்படும்.
உங்கள் செய்திகளை நகலெடுப்பதிலிருந்தோ அல்லது ஸ்கிரீன் ஷாட் செய்வதிலிருந்தோ மற்ற தரப்பினரைத் தடுக்க வாட்ஸ்அப் வழியை வழங்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்தப் புதிய அம்சம் எப்போது கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இதேபோன்ற அம்சம் ஸ்னாப்சாட்டால் பிரபலப்படுத்தப்பட்டது. மேலும், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற பிற செய்தியிடல் தளங்களும் செய்திகளை சுயமாக அழிக்கும் அம்சத்தை செயல்படுத்தியுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil