உலகளவில் சாட்டிங் செயலியில் மிகவும் பிரபலமான வாட்ஸ்அப், அவ்வப்போது பயனர்களை கவர புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், விரைவில் வாட்ஸ்அப் குரூப்பில் போலிங் (கருத்துக்கணிப்பு) வசதி இடம்பெறவுள்ளது. இந்த போலிங்கில் இடம்பெறும் ஆப்ஷன்களுக்கு குழு உறுப்பினர் வாக்குப்பதிவு செய்து, தங்கள ஆதரவை தெரிவித்தார்.
இதுகுறித்து WABetaInfo வெளியிட்ட அறிக்கையில், " இந்த வசதி முதலில் ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு வரவுள்ளது. விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த போலிங் வசதி ஆண்ட்ராய்டு செயலிக்கு எப்போது வரும் என்ற தகவல் தெரியவில்லை.
குரூப் சாட்டில் மட்டுமே போலிங் வசதி இடம்பெறும். அதன் சாட் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளதால், குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே போலிங் முடிவுகளை காணமுடியும்.
இதேபோன்ற போலிங் அம்சம் வாட்ஸ்அப்பின் போட்டி நிறுவனமான டெலிகிராம் செயலியில் மட்டுமே இடம்பெற்றிருந்தது. 2018இல் டெலிகிராம் அறிமுகப்படுத்திய போலிங் வசதிக்கு , பெரிய குழுக்களிலும், சேனல்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தன. இந்த வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டால், நிச்சயன் இரு செயலிகளிடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, வாட்ஸ்அப் கடந்த சில காலமாக அனைத்து குரூப்களையும் ஒரே இடத்தில் கண்காணிக்கும் சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய டேப் தற்போதைய கேமரா டேப் உள்ள இடத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil