Whatsapp media download problems fixed : உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் தகவல் பரிமாற்ற சாதனங்களாக முகநூல், ட்விட்டர், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றார்கள். நேற்று மாலையில் இருந்து வாட்ஸ்ஆப் மற்றும் முகநூலில் மீடியா சம்பந்தமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனால் பயனாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டது.
வாட்ஸ்ஆப்பில் அனுப்பும் புகைப்படங்கள் ரிசிவ் செய்யப்பட்டாலும் அதனை டவுன்லோடு செய்து பார்க்க இயலவில்லை. முகநூலின் கிளை நிறுவனங்களாக செயல்படும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் முற்றிலுமாக தகவல் தொடர்புகள் சிக்கலாகவும், ட்விட்டரில் பலர் தங்களின் கருத்தினை பதிவு செய்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/WhatsApp-download-failed.jpg)
முதலில் நெட்வொர்க் கோளாறு காரணமாக இந்த பிரச்சனை என்று நினைத்தனர். பின்னர் முகநூலிலும் புகைப்படங்களை பார்க்க இயலவில்லை. இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஆப்ரிக்கா என அனைத்து நாடுகளிலும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு ஏற்பட்ட இந்த குழப்பத்தால் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என பிரபல சமூக வலைதளங்கள் முற்றிலுமாக முடங்கின. ஆனால் முகநூலில் பதிவுகள் எழுதவும், வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பவும் முடிந்தது. முகநூலில் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து முகநூல் நிறுவனம் “பயனாளிகளின் பிரச்சனைகள் என்னவென்று பார்த்து அதனை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று அறிவித்திருந்தனர்.
Whatsapp media download problems & Facebook errors are fixed
இன்று காலையில் இருந்து முகநூலில் புகைப்படங்கள் மற்றும் மீடியா கண்டென்ட்டுகளை பார்க்க இயலுகின்றது. அதே போன்று வாட்ஸ்ஆப்பில் புகைப்படங்களையும் டவுன்லோட் செய்து கொள்ள இயலுகின்றது. “பயனாளர்கள் இன்று காலையில் இருந்து மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பவதில் பிரச்சனைகளை சந்தித்தீர்கள். அதனை நாங்கள் சரி செய்துள்ளோம். கூடிய விரைவில் 100% முழுமையான சேவையை நாங்கள் அளிப்போம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்” என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டீவிட் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வாட்ஸ்ஆப் ஆடியோ குறுஞ்செய்திகளை கேட்க இதை ட்ரை பண்ணுங்க