வாட்ஸ் ஆப் தனிப்பட்ட அரட்டைகளில் (individual chats) குறுஞ்செய்திகளை சுயமாக அழிப்பது (self-destructing message) பற்றி வேலை செய்து வருகிறது. Android beta பயனர்களுக்கு இந்த அம்சம் ஏற்கனவே வெளிவந்துள்ளது மேலும் அனைத்து பயனர்களையும் இது விரைவில் சென்றடையும். அனைவருக்கும் நீக்கு (delete for everyone) அம்சம் குழு அரட்டைகளுக்கு (Group chats) நீண்ட காலமாக இருந்து வருகிறது. அனுப்பிய ஒரு செய்தியை குறிப்பிட்ட நேரத்திற்குள் நீக்க இந்த அம்சம் பயனர்களை அனுமதிக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சரி, நீக்கப்பட்ட செய்தி என்ன என்பதை பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால் அதை கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. இருப்பினும், நீக்கப்பட்ட செய்திகளை காண்பிக்க வாட்ஸ் ஆப்பில் அதிகாரப்பூர்வ அம்சம் எதுவும் இல்லை என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
இது முயற்சித்து சோதித்துப் பார்த்த ஒரு செயல்முறை. நீக்கிய ஒரு வாட்ஸ் ஆப் செய்தியை வாசிக்க நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பு ஆப்பை ’WhatsRemoved+’ பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் Google Play store கிடைக்கிறது ஆனால் App store ல் இல்லை. குறிப்பாக நீக்கிய தகவல்களை உங்களுக்கு காண்பிக்க Play store ல் வேறு சில ஆப்களும் உள்ளன. ஆனால் iPhone பயனர்களுக்கு வேறு எந்த தேர்வுகளும் இல்லை.
நீக்கிய வாட்ஸ் ஆப் செய்திகளை எவ்வாறு வாசிப்பது?
WhatsRemoved+ என்ற ஆப்பை முதலில் Google Play store ல் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். கைபேசியை WiFi network ல் இணைத்து 4.90MB அளவு உள்ள இந்த ஆப்பை முதலில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
WhatsRemoved+ ஐ கைபேசியில் பதிவிறக்கம் செய்து நிறுவிய பிறகு அதை திறந்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (terms and conditions) ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த ஆப் செயல்பட உங்கள் கைபேசியின் notifications ஐ அணுகும் (access) அனுமதியை கொடுக்க வேண்டும். அடுத்து எந்தெந்த ஆப்களில் உள்ள அனைத்து notifications களையும் அது சேமித்து வைக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க சொல்லி உங்களிடம் கேட்கும். வாட்ஸ் ஆப்பில் உள்ள நீக்கப்பட்ட செய்திகளை வாசிக்க வேண்டும் என்றால் வாட்ஸ் ஆப் தேர்வை மட்டும் தேர்ந்தெடுங்கள். Facebook, Instagram போன்ற மற்ற தேர்வுகளும் அங்கு இருக்கும்.
கோப்புகளை சேமித்து வைக்க வேண்டுமா வேண்டாமா என அடுத்து WhatsRemoved+ உங்களிடம் கேட்கும், எந்த தேர்வு வேண்டுமோ அதை தேர்ந்தெடுங்கள். வாட்ஸ் ஆப்பில் நீக்கிய அனைத்து செய்திகளும் உள்ள ஒரு பக்கத்துக்கு உங்களை அடுத்து அது எடுத்துச் செல்லும். திரையின் மேல் பகுதியில் உள்ள Detected option என்பதற்கு அருகில் உள்ள வாட்ஸ் ஆப் தேர்வை சொடுக்கவும்.
இந்த settings களை enable செய்த பிறகு வாட்ஸ் ஆப்பில் நீக்கிய அனைத்து செய்திகளையும் உங்களால் வாசிக்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil