Advertisment

வாட்ஸ்அப்பில் என்ன இருக்கு என்ன இல்லை - அறிந்துகொள்ள எளிய பதிவு

Whatsapp web : வாட்ஸ்அப் வெப் வெர்சனில், நாம் குறிப்பிட்ட ஒருவரின் மெசேஜை நாம் சர்ச்பாக்சில் தேடிப்பிடித்து படிக்க முடியும். ஆனால், செயலியில் இந்த வசதி இல்லை.

author-image
WebDesk
New Update
Whatsapp, messenger room, status, indivudual chats, new features, pin chat, whatsapp web, whatsapp web feature, whatsapp features, whatsapp web tips, whatsapp web tricks, whatsapp web features, whatsapp web create room, whatsapp news, whatsapp hidden features

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலானோர் வீட்டில் இருந்தவாறே அலுவலக வேலைகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம், பயனாளர்களுக்கு அதிக பயனளிக்கும்விதம் புதிய புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் மட்டும் மில்லியன் கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், பலருக்கு இன்னும் அதில் மறைந்துள்ள வசதிகள் குறித்து அறியாதநிலையிலேயே உள்ளனர். அத்தகைய வசதிகள் குறித்து இங்கு காண்போம்

Advertisment

Web lets you create Messenger Room:

வாட்ஸ்அப் வெப்பில் இந்த வசதி கடந்தமாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. செயலியில் இன்னும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவில்லை. வாட்ஸ்அப் வெப்பில், இடது ஓரத்தில் உள்ள 3 புள்ளிகளை சொடுக்கி காண்டாக்ட்களை ஒருங்கிணைத்து நாம் Messenger Room வசதியை பெறலாம்.

Can’t download or search for a new sticker pack:

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, வெப் வெர்சனில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.ஏற்கனவே டவுன்லோட் செய்த ஸ்டிக்கர்களை மட்டுமே அவர்கள் தங்களது காண்டாக்ட்களுக்கு அனுப்பி மகிழ முடியும்.

Easy to find frequently contacted friends:

வாட்ஸ்அப் செயலி மற்றும் வெப் வெர்சனில் உள்ள இந்த வசதியினால், நாம் அடிக்கடி தொடர்பு கொள்ளும் காண்டாக்ட்களை எளிதில் அடையாளம் காண முடியும்

 

publive-image

Won’t be able to add a new status:

வாட்ஸ்அப் செயலியில், நாம் நினைத்த நேரத்தில் ஸ்டேட்டஸ்களை வைப்பது போன்று, வெப் வெர்சனில் நாம் செய்யமுடியாது

Also can’t check who checked the status:

வாட்ஸ்அப் வெப்பில், நமது ஸ்டேட்டசை யார் யார் பார்த்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்கலாமே தவிர, வேறு எதுவும் நம்மால் செய்ய இயலாது.

Search for messages in individual chats:

வாட்ஸ்அப் வெப் வெர்சனில், நாம் குறிப்பிட்ட ஒருவரின் மெசேஜை நாம் சர்ச்பாக்சில் தேடிப்பிடித்து படிக்க முடியும். ஆனால், செயலியில் இந்த வசதி இல்லை.

 

publive-image

Can’t open the same WhatsApp account in two different windows:

ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்டை, 2 விண்டோக்களில் நாம் ஓபன் பண்ண இயலாது. அதேபோல்,செயலியில் திறக்க முடியாது.

Can pin and archive chats :

வாட்ஸ்அப் வெப் மற்றும் செயலியில் இந்த வசதி உள்ளது. நமக்கு தேவைப்படும் என்பவரின் மெசெஜ்களை நாம் pin பண்ணிவைத்துக்கொள்ளலாம். தேவையற்ற தேடல், காலவிரயம் இதன்மூலம் தவிர்க்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment