scorecardresearch

புத்தம் புதிதாக மாறப் போகும் வாட்ஸ்அப்; அப்டேட் என்னனு தெரியுமா?

வாட்ஸ்அப்பில் உள்ள காலிங், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட Navigation bar அம்சங்கள் ஐபோனில் உள்ளது போல் கீழே மாற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

WhatsApp-
WhatsApp-

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமானவர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனமும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, Navigation bar அம்சத்தை ஐபோனில் உள்ளது போல் வாட்ஸ்அப் கீழ் ஸ்கிரினில் கொண்டு வரப்போவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது chat, calls, communities மற்றம் status டேப் அம்சங்களை கீழ் ஸ்கிரினிற்கு (bottom of the screen) மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப இந்த மாற்றத்தை கொண்டு வரப் போவதாக கூறப்பட்டுள்ளது. ஐபோனில் ஏற்கனவே இந்த வசதி உள்ள நிலையில் தற்போது ஆண்ட்ராய்டிலும் இது கொண்டு வரப்படுகிறது.

மேலும் இந்த அம்சம் தற்போது சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (v2.23.8.4) இந்த அம்சம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வாட்ஸ்அப் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தனி நபர் ஷேட் அம்சத்தை லாக் செய்யும் வசதி, ஸ்டேட்ஸ்ஸில் வாய்ஸ் மெசேஜ் வைக்கும் வசதி என பல்வேறு அப்டேட்களை வெளியிட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp might soon move navigation bar to bottom on android