பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப், அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவர புதிய அப்டேட்களை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வாய்ஸ் காலின் போது, திரையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில், இந்த வசதியை ஐஓஎஸ் பயனாளிகளுக்கு வழங்கியிருந்தது.
Advertisment
WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, வாய்ஸ் கால் பேசுகையில், கிரே கலரில் பாக்ஸ் திரையில் தோன்றும். பாக்ஸ் வெளியே இருக்கும் பட்டன்களை அழுத்துவதன் மூலம், ஸ்பீக்கர் மோட் மாற்றுவது, வீடியோ காலுக்கு செல்வது, ஆடியோ மியூட் செய்வது, போன் காலை கட் செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ள முடியும்.
நாம் ஒருத்தரிடம் ஆடியோ கால் பேசுகையில், கிரே பாக்ஸில் நாம் பேசும் நபரின் பெயரும், எத்தனை மணி நேரம் பேசுகிறோம் என்கிற டைமர் ஓடுகிறது. அதற்கு கீழே, பெரிய வட்டத்திற்குள் அந்நபரின் புரோபைல் பிக்சர் தோன்றும். பாக்ஸ் இறுதியில் ஆடியோ மியூட் பட்டன் உள்ளது. இதை பாக்ஸ் வெளியே உள்ள மியூட் பட்டனாக நினைத்துவிடவேண்டாம். பாக்ஸூக்கு உள்ள இருக்கும் மியூட் பட்டன் மூலம், அழைப்பை துண்டிக்காமல் நம்மிடம் பேசுபவர்களை மியூட் செய்திட முடியும். பாக்ஸ் வெளியே உள்ள மியூட் பட்டன் மூலம், நாம் பேசுவது அவர்களுக்கு கேட்காத வகையில் மியூட் செய்ய முடியும்.
Advertisment
Advertisements
கிரே பாக்ஸின் Background இமேஜ், வாட்ஸ்அப் சாட்டின் வால்பேப்பராக இருக்கும். அதே சமயம், வாய்ஸ் காலின் Background இமேஜை பயனாளர்களின் விருப்பத்தின் பேரில் மாற்றிக்கொள்ளாம் என கூறப்படுகிறது.
குரூப் கால் பேசும் போது, அதன் திரை அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. மொசைக் போன்ற UIக்குப் பதிலாக, அழைப்பில் உள்ள ஒவ்வொரு நபரையும், தனித்தனியாக கிரே பாக்ஸில் காணலாம். அந்த பாக்ஸின் மேலே அந்நபரின் பெயரும், கீழே ப்ரோபைல் பிக்சர் மற்றும் ஆடியோ அலைவரிசை உள்ளது.
தற்போது, குரூப் கால் அழைப்பின் போது எந்தப் பயனர் பேசுகிறார் என்பதை அடையாளம் காண வழி எதுவும் இல்லை. ஆனால், புதிய அப்டேட் மூலம் பேசும் நபரின் அலைவரிசை மாறுப்படுவதை வைத்து தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பீட்டர் யூசர்ஸ் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. சோதனை முயற்சியாக சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு, அவர்கள் பீட்டா வெர்ஷன் 2.22.54 டவுன்லோடு செய்திருக்க வேண்டும். சோதனை வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில், இந்த வசதி அனைவருக்கும் வெளியாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil