Whatsapp let you edit messages even after sending them: பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப், வாடிக்கையாளர்களை கவர புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எடிட் பட்டன் கொண்டு வரும் முயற்சியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisment
ட்விட்டரை போல் வாட்ஸ்அப்பிலும் தற்போது வரை எடிட் பட்டன் இல்லை. ஒருமுறை மெசேஜ் அனுப்பிவிட்டால், அதனை எடிட் செய்திட முடியாது. டெலிட் செய்ய வேண்டிய நிலை தான் இருந்தது. நீண்ட வாக்கியங்களில் மெசேஜ் அனுப்பும் போது, ஒரிரு வார்த்தைக்காக மொத்த மெசேஜும் டெலிட் செய்வது பயனர்களுக்கு சிக்கலாக இருந்து வந்தது. எடிட் பட்டன் வசதி வாட்ஸ்அப்பின் அடுத்த பீட்டா அப்டேட்டில், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைத்திடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து Wabetainfo வெளியிட்ட தகவலில், வாட்ஸ்அப் மெசேஜை எடிட் செய்யும் வசதியை சோதித்து வருகிறது. இது, மெசேஜ் அனுப்பிய பிறகு, டைபோ பிழைகளை சரிசெய்திட உதவியாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் மெசேஜ் டெலிட் செய்தாலும், முந்தைய மெசேஜை பார்த்திட எடிட் ஹிஸ்திரி இருக்காது. இந்த வசதி சோதனையில் இருப்பதாகவும், எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்கிற தகவல் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மாதம், வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறும் போது, எவ்வித நோட்டீபிகேஷனும் வராத வகையில் சைலண்டாக வெளியேறும் அம்சத்தை சோதித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil