WhatsApp New Features: வாட்ஸ் ஆப்பில் மிகவும் வெறுப்பாக இருக்கும் விஷயம் அதன் வரையறுக்கப்பட்ட cross-platform support. இப்போது சந்தையில் உள்ள சிறந்த செய்தியிடல் தடம் வாட்ஸ் ஆப் தான் என்றாலும் உங்களால் அந்த ஆப்பை பல சாதனங்களில் (multiple devices) பயன்படுத்த முடியாது. மிக விரைவில் இந்த அம்சத்தை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வாட்ஸ் ஆப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அம்சங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் @WABetaInfo என்ற டிவிட்டர் கணக்கு, வாட்ஸ் ஆப்பில் Multi-device support தற்போது சோதித்து பார்க்கப்படுவதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய அம்சம் எப்போது வெளி வரும் என்பது குறித்து ஒரு தெளிவான தேதியை அந்த அறிக்கை குறிப்பிடாவிட்டாலும் இந்த அம்சத்தை வாட்ஸ் ஆப் வரும் மாதங்களில் வெளியிடும் என நாம் எதிர்பார்க்கலாம்.
From now on WhatsApp is internally starting some important tests for the multi device feature.
It's not available yet and there isn't a release date: it could be next two months, four months, six months ????????♂️.. but it's really positive that they have started to test it on the whole.
— WABetaInfo (@WABetaInfo) June 2, 2020
பல கைபேசி சாதன ஆதரவு (multiple mobile device support) குறித்து வாட்ஸ் ஆப் ஆய்வு செய்து வருவதாக நாம் ஏற்கனவே கேள்விபட்டுள்ளோம். உண்மையில் இந்த அம்சத்தின் பல்வேறு குறிப்புகளை WABetaInfo கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டு முதலில் கண்டுபிடித்தது. இந்த அம்சத்தின் மேலும் சில குறிப்புகளை சமீபத்திய Android beta பதிப்பின் உள் WABetaInfo கடந்த மாதம் கண்டுபிடித்தது.
multi-device support க்கு ‘Linked devices’ என பெயரிடப்பட்டுள்ளது. பயனர்கள் ‘Link a new device’ பொத்தானை அழுத்தி ஒரு புதிய சாதனத்தின் உள் லாக் இன் செய்து கொள்ள இது அனுமதிக்கும். பயனர்கள் ஒரே கணக்கை (same account) பல சாதனங்களில் (multiple devices) பயன்படுத்த வாட்ஸ் ஆப் தற்போது அனுமதிப்பதில்லை. ஆனால் இந்த அம்சம் Telegram வழக்கில் உள்ளது.
வாட்ஸ் ஆப் கணக்கை பல சாதனங்களில் (multiple devices) பயன்படுத்துவது என்பது வாட்ஸ் ஆப்பை வலைதளத்தில் (Web) பயன்படுத்துவதில் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.