Whatsapp new feature mute videos before sending Tamil News : உடனடி செய்தியிடல் பயன்பாடான வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தைச் சேர்த்திருக்கிறது. இது வீடியோக்களைப் பகிர்வதற்கு முன்பு மியூட் செய்யப் பயனர்களை அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள், வீடியோ ஃபைல்களின் ஆடியோவை ஸ்டேட்டஸில் பகிர்வதற்கு முன்பும் மியூட் செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சம் இப்போது ஆண்டிராய்டு சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மியூட் வீடியோ அம்சம், கடந்த மாதம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் காணப்பட்டது. இப்போது, இது செயலியின் நிலையான பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கும் கிடைக்கிறது. சில எளிய வழிமுறைகளில் இந்த அம்சத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது இங்கே பார்க்கலாம்.
பகிர்வதற்கு முன் வாட்ஸ்அப்பில் வீடியோக்களை மியூட் செய்வது எப்படி
ஸ்டெப் 1: மியூட் செய்த வீடியோவை ஒருவருக்கு அனுப்ப, முதலில் நீங்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்பின் சாட் சாளரத்தைத் திறப்பதன் மூலம் தொடரவும்.
ஸ்டெப் 2: நீங்கள் சாட் சாளரத்ற்கு வந்ததும், பேப்பர் கிளிப் ஐகானைக் கிளிக் செய்து வீடியோ ஃபைலை இணைக்க கேலரியைத் தேர்வுசெய்க.
Follow these simple steps to mute WhatsApp videos before sending them
ஸ்டெப் 3: நீங்கள் அனுப்ப விரும்பும் வீடியோ ஃபைலை தேர்வு செய்ய முன்னோட்டங்களிலிருந்து வீடியோ கோப்பைக் கிளிக் செய்யுங்கள். அடுத்தடுத்த திரையில், வீடியோவின் பிரேம்களுக்குக் கீழே, இடதுபுறத்தில் புதிய ஸ்பீக்கர் ஐகானை பார்ப்பீர்கள்.
ஸ்டெப் 4: அனுப்பு பட்டனை க்ளிக் செய்வதற்கு முன், அந்த வீடியோ ஃபைலின் ஆடியோவை முடக்க இந்த ஸ்பீக்கர் ஐகானைக் கிளிக் செய்யவேண்டும். இது உங்கள் தொடர்புக்கு, ஃபைலின் வீடியோ பதிப்பை மட்டும் அனுப்பும். அதே வீடியோவை unmute செய்ய மீண்டும் அதே பட்டனை கிளிக் செய்யலாம்.
இந்தப் புதுப்பிப்பு முக்கியமானதாக இல்லை என்றாலும், பயனர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோக்களில் உணர்ச்சி வயப்படுகிற ஆடியோவை முடக்க முடியும் என்பதால் இது பயனுள்ளதாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"