WhatsApp Feature Update: பயனாளர்களின் வசதியை மேம்படுத்த, வாட்ஸ் அப் தொடர்ந்து பல அப்டேட்டுகளை செய்து வருகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு அந்த அப்டேட்ஸ் கிடைப்பதற்கு முன்பு பல்வேறு பீட்டா சோதனைகள் நடைபெறும். சில பீட்டா சோதனையாளர்களுக்கு புதிய அப்டேட்டுகள் விரைவில் கிடைத்துவிடும்.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் iOS இயங்கு தள வாட்ஸ் பயன்பாட்டாளர்களுக்கு பயன்படும் வகையில், புதிய வசதியை சோதனை செய்து வருகிறது என WABetaInfo பிளாக் தெரிவித்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப் பயனாளிகள் தவறான வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதை தடுக்கும் பொருட்டு, அந்த வாய்ஸ் மெசேஜை உருவாக்கிய பிறகு, அனுப்புவதற்கு முன்பு முழுவதும் கேட்க முடியும். இதன் மூலம், அதில் தவறான செய்தியோ, தவறான தகவலோ இடம் பெறுவதை நாம் முன்கூட்டியே அறிந்து, அனுப்புவதை நிறுத்திக் கொள்ளலாம்.
Push Notification Window-ல் வாய்ஸ் மெசேஜை முன்கூட்டியே கேட்பதற்கான ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும். அதன் மூலம், நாம் அனுப்ப வேண்டும் என்று நினைக்கும் வாய்ஸ் மெசேஜை முழுவதும் கேட்க முடியும். வேண்டுமெனில், அனுப்பலாம் இல்லையெனில் டெலிட் செய்து விடலாம்.
இந்த வசதி இப்போது சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. அதுவும், iOS இயங்கு தள பயன்பாட்டாளர்களுக்கு மட்டும். விரைவில், அனைத்து வாட்ஸ் அப் யூசர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.