மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இது போலி செய்திகள், படங்களை கண்டறியும் வகையில் கொண்டு வரப்படுகிறது. வேறு எந்த செயலியும் டவுன்லோடு செய்யாமல் வாட்ஸ்அப் மூலமாகவே செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுகிறது.
இது தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. வாட்ஸ்அப்-ல் வரும் படங்களின் உண்மைதன்மையை கண்டறிய இதுஉதவும். 'Search on web' என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் சென்று படத்தை கிளிக் செய்யவும். வலப்புறத்தில் உள்ள 3 புள்ளி பட்டனை கிளிக் செய்யவும். கூகுள் லென்ஸ் பக்கத்திற்கு செல்லும் அங்கு சென்று இந்தப் படத்தை அப்லோடு செய்தால் இந்த படம் பற்றி தகவல்கள் வரும்.
அதை படித்து இந்த படம் எங்கு பயன்படுத்தப்பட்டது, என்ன படம் என்ற விவரங்களை அறியலாம். அதாவது கூகுள் reverse image search வசதி மூலம் இது செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“