New Update
/
வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனமும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது, synchronised ஆடியோ, வீடியோ அனுபவங்களைப் பெறும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது, நீங்கள் வீடியோ காலில் இருக்கும் போதே மற்றவருடன் ஆடியோ மியூசிக், வீடியோ உள்ளிட்டவைகளைப் பகிர்ந்து synchronised அனுபவத்தைப் பெறலாம். வீடியோ காலில் இருக்கும் போது ஒரு நபர் ஸ்கிரீன் ஷேர் செய்தால் அவர் ஆடியோ ஏதேனும் ப்ளே செய்தால் அதை மற்றவர்களிடத்திலும் பகிரலாம். இந்த அம்சம் one-on-one அழைப்புகளுக்கு மட்டும் இல்லை, குரூப் காலிலும் இதை பயன்படுத்தலாம். synchronised ஆடியோ அனுபவத்தைப் பெறலாம்.
மேலும், மற்றொரு சிறப்பம்சமாக இருவர் அல்லது குழுவாக ஒன்றாக சேர்ந்து வீடியோக்களைப் பார்க்க முடியும். இதன் போது வீடியோ காலின் போது shared ஆடியோ பயன்படுத்தலாம். பயனர்கள் தங்கள் வீடியோ பிளேபேக் அனுபவங்களை synchronise செய்யலாம். இது மெய்நிகர் திரைப்படம் பார்க்கும் வசதி மற்றும் கன்டெண்ட் பகிர்வு செயல்களில் மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த அம்சங்கள் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.