Whatsapp New Features 2020 Tamil News : வாட்ஸ்அப் அதன் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பீட்டா பயன்பாடுகளில் சில முக்கிய அம்சங்களைச் சேர்க்கவிருக்கிறது. ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான இந்நிறுவனம் சமீபத்தில் டெஸ்க்டாப் / வலைத் தளத்திற்கு வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு அம்சத்தைச் சேர்த்தது. இப்போது, தவறவிட்ட வாட்ஸ்அப் குழு அழைப்புகளில் சேர உங்களை அனுமதிக்கிறது.
அனைத்து iOS பீட்டா பயனர்களும் இப்போது பன்மடங்கான படங்களையும் வீடியோக்களையும் வாட்ஸ்அப்பில் ஒட்ட முடியும். இந்த அம்சங்கள் தற்போது சில வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன என்பதையும், விரைவில் இவற்றை நிலையான பதிப்பிற்கு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மிஸ்டு க்ரூப் கால்ஸ்
நீங்கள் தவறவிட்ட குழு அழைப்புகளில் சேர வாட்ஸ்அப் விரைவில் உங்களை அனுமதிக்கும். அதாவது, ஒரு குழு அழைப்பில் சேர யாராவது உங்களை அழைத்தால், அந்த நேரத்தில் நீங்கள் சேர முடியாவிட்டால், அடுத்த முறை நீங்கள் வாட்ஸ்அப்பைத் திறக்கும்போது, அழைப்பு முடிவடையவில்லை என்றால், உடன் நீங்கள் சேர முடியும்.
அக்டோபர் 2020-ல் இதே அம்சம் ஆண்ட்ராய்டில் காணப்பட்டது, இப்போது, வாட்ஸ்அப் அதை iOS பயனர்களுக்காகச் சோதிக்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் iOS பீட்டா சோதனையாளர்கள் இந்த அம்சத்தை அணுக முடியும். நீங்கள் அழைப்புகளை எடுக்காத அல்லது நீங்கள் அழைப்பில் சேர முடியாது நேரங்களும் இருப்பதால் இது வாட்ஸ்அப்பில் மிகவும் தேவைப்படும் அம்சமே.
பன்மடங்கு படங்களை ஓட்டும் அம்சம்
இந்த அம்சம் iOS 2.21.10.23 வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்குக் கிடைக்கிறது. இதுபற்றி Wabetainfo, "புதிய ஆண்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் பீட்டா" என்று கூறுகிறது. புதிய புதுப்பிப்பு பயனர்களைப் பல படங்களையும் வீடியோக்களையும் வாட்ஸ்அப்பில் ஒட்ட அனுமதிக்கிறது. இந்த அம்சத்தை நீங்கள் பெற்றுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்க, iOS பீட்டா பயனர்கள், புகைப்படங்கள் பயன்பாட்டிலிருந்து பல படங்களைத் தேர்ந்தெடுத்து, “ஏற்றுமதி” மற்றும் “நகலெடு” என்பதைத் தட்டவும். மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரம், நீங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து, உள்ளடக்கத்தை சாட் பட்டியில் ஒட்டினால், “எல்லா படங்களும் வாட்ஸ்அப்பில் இருந்து பிடிக்கப்படும், அனுப்பத் தயாராக இருக்கும்” என்று கூறுகிறது.
வாட்ஸ்அப் வெப் அழைப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு வாட்ஸ்அப் வெப் அழைப்பு அம்சம் இப்போது கிடைக்கிறது. இது விரைவில் பொதுமக்களுக்கும் கிடைக்கும். இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பின் டெஸ்க்டாப் / வலை பதிப்பில் செயலில் உள்ளது.
மொபைல் பதிப்பைப் போன்ற அழைப்பு பட்டன் சாட் தலைப்பில் அமைந்திருக்கும். நீங்கள் வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப்பில் அழைப்பைப் பெறும்போதெல்லாம், ஒரு தனி பாக்ஸ் பாப் அப் ஆகும். இது உள்வரும் அழைப்பை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது அல்லது புறக்கணிப்பது உள்ளிட்ட மூன்று விருப்பங்களை உங்களுக்கு வழங்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"