WhatsApp new features: வாட்ஸ் அப்பில் உங்கள் சாட்டிங்கை மெருகேற்ற நான்கு புதிய வசதிகள் அறிமுகம்!

ஆன்ட்ராய்ட்டில் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் அனைவரும், 2.19.3 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்து இந்த வசதியை பயன்படுத்த தொடங்கலாம்

ஆன்ட்ராய்ட்டில் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் அனைவரும், 2.19.3 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்து இந்த வசதியை பயன்படுத்த தொடங்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குரூப் சாட் தொல்லையில் இருந்து தப்பிக்க மீண்டும் ஒரு வாட்ஸ்ஆப் அப்டெட்!

வாட்ஸ் அப் தனது பயனாளிகளுக்காக, சில புதிய வசதிகளை ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதள பயன்பாட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.

Advertisment

கைரேகை லாக் வசதி

வாட்ஸ் அப் நிறுவனம், பயோமெட்ரிக் அன்லாக் வசதியை ஆன்ட்ராய்ட் ஆப் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. ஐஓஎஸ் இயங்குதள பயன்பாட்டாளர்களுக்கு ஏழு மாதங்களுக்கே முன்பே இந்த வசதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆன்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் வாட்ஸ் அப் பயனாளர்கள் Face ID அல்லது Touch ID கொண்டு வாட்ஸ் அப்-ஐ அன்லாக் செய்யலாம்.

Advertisment
Advertisements

ஆன்ட்ராய்ட்டில் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் அனைவரும், 2.19.3 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்து இந்த வசதியை பயன்படுத்த தொடங்கலாம்.

பேஸ்புக்கில் இருந்து வாட்ஸ்அப்

பிப்ரவரி 2014ம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியது. இந்நிலையில், பேஸ்புக் தனது பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு தெரியும் வகையில், "பேஸ்புக்கில் இருந்து வாட்ஸ்அப்" எனும் லேபிளை சேர்த்தது. இதன் மூலம், வாட்ஸ் அப் நிறுவனம் எங்களுடையது என்பதை ஒவ்வொரு வாட்ஸ் அப் பயனாளிகளுக்கும் பேஸ்புக் தெரியப்படுத்துகிறது. உங்கள் வாட்ஸ் அப் செட்டிங்கில் இனி, “WhatsApp from Facebook” என்ற வாசகம் தெரியும்.

அடிக்கடி ஃபார்வர்டு ஆகும் மெசேஜை கண்டறிதல்

பயனாளர்களின் தரவுகளை பாதுகாப்பதில் பேஸ்புக் சில சிக்கல்களை சமீபத்தில் சந்தித்தது. வாட்ஸ் அப் கூட அடிக்கடி, இந்தியாவில் பொய்யான தகவல்களை பரப்புகிறது என்ற குற்றச்சாட்டில் சிக்கியது. இந்த சிக்கலை தவிர்க்க, 'Forwarded' இயக்கத்தில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட வசதியின் படி, எந்தவொரு செய்தியும் ஐந்து முறைக்கு மேல் ஃபார்வர்டு செய்யப்பட்டால், "forwarded many times" என்ற வாசகம் உங்களுக்கு தோன்றும். இதன் மூலம் பொய் தகவல்களை கட்டுப்படுத்த முடியும் என பேஸ்புக் நம்புகிறது.

தொடர்ச்சியான வாய்ஸ் மெசேஜ்

ஆன்ட்ராய்டு வாட்ஸ் அப் பயனாளர்கள் சமீபத்தில் இந்த அப்டேட் பெற்றனர். இதன் மூலம், பயனாளர்கள் ஒரே சமயத்தில் பல வாய்ஸ் மெசேஜ்களை தானாகவே கேட்க முடியும். அதவாது, முதல் வாய்ஸ் மெசேஜ் முடிந்த பிறகு, அடுத்த வாய்ஸ் மெசேஜ் அதுவாகவே ஒலிக்கத் தொடங்கும்.

Whatsapp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: