வாட்ஸ்அப் வெப் அப்டேட்ஸ் : புத்தம் புதிய இமேஜ் எடிட்டர் அறிமுகம்!

Whatsapp new features include image editor for web Tamil News இதில் மொத்தம் 217 புதிய எமோஜிகள் வரும் என்று கூறப்படுகிறது.

Whatsapp new features include image editor for web Tamil News
Whatsapp new features include image editor for web Tamil News

Whatsapp new features include image editor for web Tamil News : வாட்ஸ்அப் அதன் பிரவுசர் வாடிக்கையாளரான வாட்ஸ்அப் வெப்பிற்காக சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சங்களில், படங்களை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்புவதற்கு முன்பு அவற்றைத் திருத்துவதற்கான புதிய, சிறந்த வழி மற்றும் மொபைல் பதிப்பிற்கு ஏற்ப இணைய அனுபவத்தை அதிகமாக்குகிறது. மொபைல் பதிப்பைப் பற்றிப் பேசுகையில், இந்த புதிய அப்டேட் சில புதிய எமோஜிகளையும் கொண்டு வருகிறது.

புதிய பட எடிட்டர்

பயன்பாட்டில் உள்ள புதிய பட எடிட்டிங் கருவிகள், புதிய ‘வரைதல் கருவிகள்’ பண்டுலின் ஒரு பகுதி. இது பயனர்களை, படங்களை அனுப்பும் முன் அதனை மாற்றியமைக்க அனுமதிக்கிறது. இந்த அம்சம் நீண்ட காலமாக வாட்ஸ்அப்பின் ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் உள்ளது மற்றும் பயனர்கள் தேவையானவற்றைக் குறிக்கவும், ஃபில்டர்களை சேர்க்கவும் மற்றும் டெக்ஸ்ட் எலிமென்ட்டுகளை சேர்க்கவும் அனுமதிக்கிறது.

வலை பதிப்பும் இப்போது அதையே செய்ய முடியும். மேலும், பயனர்கள் ஏற்கனவே இருக்கும் படத்தின் மேல் டூடுல் செய்ய முடியும், ஸ்டிக்கர்கள் மற்றும் எமோஜிகளைச் சேர்க்கவும் முடியும். ஒரு புகைப்படத்தைப் பயனர்களுக்கு அனுப்பும் முன் அதை க்ராப் செய்யவோ அல்லது சுழற்றவோ கருவி அனுமதிக்கும்.

பயன்பாட்டின் மொபைல் பதிப்புகளில் பயனர்கள் பயன்படுத்தியதைப் போலவே இந்த கருவிகளையும் செயல்படுத்த முடியும். சாட் சாளரத்திற்குள் அனுப்ப ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, டூட்லிங் மற்றும் அதனை ஆதரிக்கும் எலிமென்ட்டுகளை சேர்ப்பதற்கான கருவிகள், அனுப்பு பட்டனுடன் திரையில் தோன்றும். இந்த நேரத்தில், பயனர்கள் படத்தை அவர்கள் விரும்பும் வழியில் திருத்தலாம் அல்லது அவர்கள் தேர்வு செய்தால் நேரடியாக அனுப்பலாம்.

புதிய எமோஜிகள்

வாட்ஸ்அப் 2.21.16.10 பதிப்புடன் புதிய எமோஜிகளையும் பயன்பாட்டில் சேர்க்கிறது. இவை இயங்குதளத்தின் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப் இரண்டிற்கும் வரும். WABetaInfo-ன் அறிக்கையின்படி இந்த புதிய எமோஜிகள் பயன்பாட்டின் பீட்டா பதிப்பில் காணப்படும்.

புதிய எமோஜிகளில் தம்பதிகள், முத்தமிடும் தம்பதிகள், சுழல் கண்களுடன் திகைப்பூட்டும் முகம் மற்றும் மேகங்களின் எமோஜியில் ஒரு முகம் ஆகியவை அடங்கும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வெவ்வேறு தோல் டோன்கள் மற்றும் சிகை அலங்காரங்கள் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தாடி எமோஜிகளுடன் இருக்கும். இதில் மொத்தம் 217 புதிய எமோஜிகள் வரும் என்று கூறப்படுகிறது.

எமோஜியை முழுமையாகப் பயன்படுத்த, அனுப்புநர் மற்றும் பெறுநர் இருவரும் பயன்பாட்டின் பீட்டா பதிப்பில் இருக்க வேண்டும். இதன் பொருள் நீங்கள் இப்போது சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவில் இருந்தால், அதில் புதிய அம்சம் இருந்தால், புதிய எமோஜிகளை பீட்டாவுடன் மற்றவர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp new features include image editor for web tamil news

Next Story
வாட்ஸ்அப்: கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை 60 வினாடிகளுக்குள் பெறுவது எப்படி?Whatsapp how to download covid19 vaccination certificate guide Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com