வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. வாட்ஸ்அப் எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளதால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனமும் தங்களது பயனர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா (முன்பு பேஸ்புக்) நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், விரைவில் வரவிருக்கும் வாட்ஸ்அப் புது அம்சங்களை பற்றி அறிவித்தார்.
‘Online’ status indicator நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தல், ‘View Once’ Message ஒரு முறை மட்டும் பார்க்கும் மெசேஜில் மாற்றம், Leaving WhatsApp groups silently வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து வெளியேறுவது ஆகிய மூன்று வசதிளை அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பிரைவசியை மேம்படுத்தும் வகையில் புது அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
'ஆன்லைன்' ஸ்டேடஸ் காண்பிக்கும் வசதி
நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது, மற்றவர்களுக்கு நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்கள் என்பது 'ஆன்லைன்' என்று காண்பிப்பது மூலம் தெரியவரும். இந்நிலையில் இந்த புது வசதியின் மூலம் அதை யார் பார்க்க வேண்டும், யார் பார்க்க வேண்டாம் என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ‘Online’ status indicator வசதி இம்மாத இறுதியில் அனைவரது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை மட்டும் பார்க்கும் மெசேஜில் மாற்றம்
ஒரு முறை மட்டும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும் வகையில் ‘View Once’ மெசேஜ் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வசதியில் கூடுதல் பிரைவசி அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது ஒரு முறை மட்டும் பார்க்க முடியும் வகையில் அனுப்பப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை ஸ்கிரீன்சாட் (Screenshot) அல்லது சேமிக்க முடியாது. இந்த வசதி பரிசோதனையில் உள்ளதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து வெளியேறுவது
வாட்ஸ்அப்பில் ஏராளமான குரூப்பில் சேர்க்கப்பட்டிருப்போம். நண்பர்கள், உறவினர்கள் என பல குரூப் இருக்கும். இதிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் வெளியேறி இருக்க மாட்டோம். காரணம் அனைவருக்கும் நோட்டிஃபிகேஷன் காண்பிக்கும். இந்நிலையில் இதற்கு சூப்பர் வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. இனி வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து வெளியேறினால், அனைவருக்கும் நோட்டிஃபிகேஷன் செல்லாது. குரூப் அட்மினுக்கு மட்டும் நோட்டிஃபிகேஷன் காண்பிக்கும்படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இந்த வசதி பயன்பாட்டிற்கு வர உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.