உளவு பார்த்ததன் எதிரொலி... பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தும் வாட்ஸ்ஆப்

WhatsApp end-to-end encryption Feature : வாட்ஸ்ஆப் தற்போது தங்களின் வாடிக்கையாளர்களுக்காக சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்க துவங்கியுள்ளது

Whatsapp New Privacy Features Screen Lock, Block contacts, Read notification :  வாட்ஸ்ஆப் மூலமாக இந்தியாவின் சில முக்கியத் தலைவர்களின் செயல்பாடுகள் இஸ்ரேல் நாட்டால் கண்காணிக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியானது. வாட்ஸ்ஆப் தற்போது தங்களின் வாடிக்கையாளர்களுக்காக சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்க துவங்கியுள்ளது.

Screen Lock for WhatsApp

ஃபிங்கர் பிரிண் அல்லது பேஸ் ஐடி இருந்தால் மட்டுமே வாட்ஸ் ஆப் திரையை ஓப்பன் செய்ய இயலும் என்று தற்போது புதிய ஆப்சன் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் வாட்ஸ் ஆப்திரையை எப்போது வேண்டுமானாலும் அன்லாக் செய்துகொள்ளலாம். இதற்கு நீங்கள் செட்டிங்ஸ்-> அக்கவுண்ட்-> பிரைவசி சென்று அங்கு நீங்கள் ஸ்கிரீன் லாக் என்ற ஆப்சனை பயன்படுத்தி இந்த வசதியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Choose who can add you to Groups

எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் உங்களை எந்த க்ரூப்பிலாவது இணைக்கும் வசதி முன்பு இருந்தது. தற்போது உங்களின் காண்டாக்ட்டில் இருப்பவர்கள் மட்டுமே ஆட் செய்யும் வசதியையும், லிங்க் மூலமாக நீங்கள் விரும்பினால் மட்டும் ஆட் ஆகிக் கொள்ளும் வசதியும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Settings > Account > Privacy > Groups – என சென்று அங்கு நோபடி, மை காண்டாக்ட்ஸ், மை காண்டாக்ட்ஸ் எக்ஸெப்ட் என இருக்கும் ஆப்சன்களை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

Choose who can see your Profile picture/Status

உங்களுடைய புரொஃபைல் பிக்சர் மற்றும் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவைகளை உங்களின் விருப்பப்படி நீங்கள் யாருக்காக வைக்க வேண்டுமோ தேர்வு செய்து அவ்வாறே வைத்துக் கொள்ளலாம்.

Block contacts

உங்களுக்கு விருப்பம் இல்லாதவர்கள் உங்களுக்கு தொடர்ந்து மெசேஜ்களை அனுப்பிக் கொண்டிருந்தால் நீங்கள் யோசிக்காமல் அவர்களின் இணைப்பை துண்டிக்க இயலும். காண்டாக்டில் லாங்க் பிர்ஸ் செய்து உங்கள் இணைப்பில் உள்ளவர்களை நீங்கள் ப்ளாக் செய்ய இயலும். உங்களின் காண்டாக்ட்டில் இல்லாத நபர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால் அவர்களை ப்ளாக் செய்ய அங்கேயே உங்களுக்கு ப்ளாக் என்ற ஆப்சன் உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close